06.04.2016 மன்மத வருடம் பங்குனி மாதம் 24 ஆம் நாள் புதன் கிழமை

Published on 2016-04-06 07:53:45

கிருஷ்ணபட்ச சதுர்த்தசி திதி முன்னிரவு 7.48 வரை. பின்னர் அமாவஸ்யை திதி பூரட்டாதி நட்சத்திரம் காலை 6.35 வரை. பின்னர் உத்தரட்டாதி பின்னிரவு 5.03வரை. அதன் மேல் ரேவதி நட்சத்திரம். போதாயண அமாவஸ்யை நட்சத்திரம் ????????. சிரார்த்த திதி அமிர்த சித்தியோகம். மேல் நோக்கு நாள் சந்திரஷ்டம நட்சத்திரம் பூரம். சுபநேரங்கள் காலை 9.30 – 10.30 மாலை 5.30 – 6.30 ராகுகாலம் 12.00 – 1.30. எமகண்டம் 7.30 – 9.00. குளிகை காலம் 10.30 – 12.00. வாரசூலம் – வடக்கு (பரிகாரம் – பால்)

மேடம் : நலம், ஆரோக்கியம்

இடபம் : நன்மை, அதிர்ஷ்டம்

மிதுனம் : நற்செயல், பாராட்டு

கடகம் :தடை, கவலை

சிம்மம் : திறமை, ஆர்வம் 

கன்னி : அமைதி, சாந்தம்

துலாம் : செலவு, விரயம்

விருச்சிகம் : சிக்கல், கவலை

தனுசு : வெற்றி, யோகம்

மகரம் : இன்பம், சுகம்

கும்பம் : விவேகம், வெற்றி

மீனம் : அன்பு, இரக்கம்

குல சேகராழ்வார் அருளிய திவ்ய பிரபந்தம். ஐந்தாம் திருமொழி “வாளால் அறுத்தச் சுடினும் மருத்துவன்பால் மாளாத காதல் நோயாளன் போல் மாயத்தால் மீளாத் துயர்வரினும் விற்றுவக் கோட்டம்மா! நீ ஆளா உனதருளே பார்ப்பன் அடியேனே” பொருளுரை. மருந்துவன் காயத்தை கத்தி கொண்டு அறுத்தாலும் மூட்டு வலி நோய்க்காக மஞ்சளால் மூட்டுகளில் சுட்டாலும் நோயாளி மருத்துவனிடம் அன்போடு பழகுவான். தன் நன்றியை தெரிவிப்பான். அதுபோன்று உன் மாயையினால் நீங்காத துன்பத்தை தந்தாலும் வித்துவக் கோட்டம்மானே! அவை அனைத்தும் என்னைக் கரை சேர்க்கத்தானே. உன் பக்தனான நான் உன் கருணையையே எதிர்பார்த்து வாழ்கிறேன்” ஆழ்வார் திருவடிகளே சரணம்.

(“கொடுத்ததை மறப்பதும் பெற்றதை நினைப்பதுமே நட்புக்கு அழகு”)

சுக்கிரன், சூரியன் கிரகங்களின் ஆதிக்க நாள் இன்று.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 6

பொருந்தா எண்கள்: 3, 8

அதிர்ஷ் வர்ணங்கள்: அடர்பச்சை, மஞ்சள்

இராமரத்தினம் ஜோதி (தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)