மனநிறைவு என்பது இயற்கையாக நம்மிடம் உள்ள செல்வம், ஆடம்பரம் என்பது நாம் தேடிக்கொள்ளும் வறுமை: இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (09.06.2019)..!

Published on 2019-06-09 10:43:41

09.06.2019 ஸ்ரீ விகாரி வருடம் வைகாசி மாதம் 26 ஆம் நாள் ஞாயிற்­றுக்­கி­ழமை

சுக்­கில பட்ச ஸப்­தமி திதி பின்­னி­ரவு 2.33 வரை. அதன்மேல் அஷ்­டமி திதி. மகம் நட்­சத்­திரம் மாலை 5.53 வரை. பின்னர் பூரம் நட்­சத்­திரம் சிரார்த்த திதி வளர்­பிறை ஸப்­தமி. மரண யோகம் கீழ்­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள்: திரு­வோணம், அவிட்டம். சுப நேரங்கள்: பகல் 10.30 – 11.30 மாலை 3.30 – 4.30 ராகு­காலம் 4.30 – 6.00 எம­கண்டம் 12.00 – 1.30 குளி­கை­காலம் 3.00 – 4.30. வார­சூலம் – மேற்கு (பரி­காரம் – வெல்லம்).

மேடம் : வெற்றி, அதிர்ஷ்டம்

இடபம் : அமைதி, நிம்­மதி

மிதுனம் : புகழ், பெருமை

கடகம் : பகை, விரோதம்

சிம்மம் : அன்பு, பாசம்

கன்னி : லாபம், லஷ்­மீ­கரம்

துலாம் : உற்­சாகம், மகிழ்ச்சி

விருச்­சிகம் : கவனம், எச்­ச­ரிக்கை

தனுசு : நிறைவு, மகிழ்ச்சி

மகரம் : பகை, எதிர்ப்பு

கும்பம் : சுகம், ஆரோக்­கியம்

மீனம் : பக்தி, ஆசி

தெஹி­வளை நெடுமால் ஸ்ரீ வெங்­க­டேஸ்­வர பெரு­மா­னுக்கு, பகல் திரு­மஞ்­சனம், தீபா­ரா­தனை சகஸ்­ர­நாம அர்ச்­சனை அடி­ய­வர்­க­ளுக்கு அன்­ன­தானம். மகம் நட்­சத்­திர தின­மான இன்று சூரிய வழி­பாடு, ஆதித்ய ஹிரு­தய ஸ்தோத்­திர பாரா­யணம், கண்­ணூறு கழித்தல் ஆரோக்­கிய ஸ்நானம் என்­பன நன்று. 

(“நாக்கு மூன்று அங்­குலம் தான் நீளம். ஆனால் அது ஆறு அடி உய­ர­முள்ள மனி­த­னையும் கொன்று விடும் ஆற்றல் கொண்­டது” – ஜப்பான் பழ­மொழி)

செவ்­வாயின் பூரண ஆதிக்கம் கொண்ட இன்று.

அதிர்ஷ்ட எண்கள்: 5–6–9

பொருந்தா எண்கள்: 2–8

அதிர்ஷ்ட வர்ணங்கள்: சிகப்பு, நீலம்

ராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)