மனதை சுத்தப்படுத்த ஒருநொடி போதும் ..அந்த ஒருநொடியை செலவு செய்யத்தான் நமக்கு மனமில்லை...:இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (08.06.2019)..!

Published on 2019-06-08 11:33:57

08.06.2019 ஸ்ரீ விகாரி வருடம் வைகாசி மாதம் 25 ஆம் நாள் சனிக்­கி­ழமை

சுக்­கில பட்ச பஞ்­சமி திதி காலை 7.25 வரை. அதன்மேல் சஷ்டி திதி. பின்­னி­ரவு 5.00 மணி வரை. அதன் மேல் ஸப்­தமி திதி (திதி அவ­மாகம்). ஆயில்யம் நட்­சத்­திரம் முன்­னி­ரவு 7.31 வரை. பின்னர் மகம் நட்­சத்­திரம் சிரார்த்த திதி வளர்­பிறை சஷ்டி. மரண யோகம் கீழ்­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள்: உத்­தி­ராடம், திரு­வோணம். சுப நேரங்கள்: பகல் 11.00 – 12.00 மாலை 4.30 – 5.30 ராகு­காலம் 9.00 – 10.30 எம­கண்டம் 1.30 – 3.00 குளி­கை­காலம் 6.00 – 7.30. வார­சூலம் – கிழக்கு (பரி­காரம் – தயிர்).

மேடம் : சிந்­தனை, தெளிவு

இடபம் : நன்மை, அதிர்ஷ்டம்

மிதுனம் : செலவு, விரயம்

கடகம் : பகை, எதிர்ப்பு

சிம்மம் : உழைப்பு, உயர்வு

கன்னி : சுகம், ஆரோக்­கியம்

துலாம் : ஆசை, விருப்பம்

விருச்­சிகம் : நிறைவு, செல்­வாக்கு

தனுசு : லாபம், லஷ்­மீ­கரம்

மகரம் : பணம், பரிசு

கும்பம் : நலம், ஆரோக்­கியம்

மீனம் : நன்மை, அதிர்ஷ்டம்

இன்று சஷ்டி விரதம். அனுஷ்­டிப்­ப­வர்கள் சகல காரிய சித்தி, தைரியம் புஷ்டி, ரோக­மில்லா நீண்ட ஆயுள் அடை­வார்கள் என்று பவிஷ்ய புராணம் கூறு­கின்­றது. சோமாசி மாறனார் குரு­பூஜை. ஆயில்யம் நட்­சத்­திரம். ஆதி­சேடன் இதன் தேவ­தை­யாவார். சர்ப்ப சாந்தி செய்தல் நன்று. 

(“உன் சொத்­துக்கள் உன்­னு­டை­யவை என்றால் அடுத்த உல­கிற்கு உன்­னுடன் அவற்றை எடுத்துச் செல்­வது தானே” – பெஞ்­சமின் பிராங்க்ளின்)

சனியின் பூரண ஆதிக்கம் கொண்ட இன்று.

அதிர்ஷ்ட எண்கள்: 5–6

பொருந்தா எண்கள்: 8–7

அதிர்ஷ்ட வர்­ணங்கள்: மஞ்சள், பச்சை, நீலம்

ராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)