12 ராசிகளுக்குமான 02-06-2019 முதல் 08-06-2019 வரையான முழுமையான பலன்கள் ஒரே பார்வையில்...

Published on 2019-06-03 17:06:36

01. இனிமையாகப் பேசும் மேஷ ராசி அன்பர்களே!


அஸ்­வினி, பரணி, கார்த்­திகை 1ஆம் பாதம் கொண்ட மேட­ரா­சியி­னர்க்கு தொழில் சார்ந்த நன்­மைகள் இருக்கும். குடும்ப நிலையில் அனு­கூ­ல­மான பல­னி­ருக்கும். பண­வ­ரவு மிகவும் திருப்­தி­க­ர­மா­ன­தாக அமையும். கொடுக்கல் வாங்­கலில் சுமு­க­மான பல­னி­ருக்கும். உற­வி­னர்­களின் மூல­மாக நன்­மைகள் இருக்கும். எதிர்­பா­ராத  நன்­மைகள் ஏற்­படும் பல­னி­ருக்கும். பெண்­க­ளுக்கு நன்­மை­யுண்டு, மாண­வர்­க­ளுக்கு சிறப்­புண்டு. அனு­கூ­ல­மான நாள் திங்கள்,  நன்­மை­யான திகதி 04.  


02. உறுதியான மனம் கொண்ட ரிஷப ராசி அன்பர்களே!


கார்த்­திகை 2,3,4 ஆம் பாதம், ரோகிணி, மிரு­க­சீ­ரிடம் 1,2 ஆம் பாதம் கொண்ட இட­ப­ரா­சி­யி­ன­ருக்கு சற்று மத்­தி­ம­மான பலன்கள் இருக்கும். தொழில் சார்ந்த வேலைப்­பளு அதி­க­மாக அமையும். பண­வ­ரவு சற்று மத்­தி­ம­மா­ன­தா­கவே அமையும். எதிர்­பா­ராத செல­வீ­னங்கள் அதி­க­மாக இருக்கும். கொடுக்கல் வாங்­கலில் சற்று இழு­பறி இருக்கும். குடும்ப நிலையில் சிறு சிறு மந்­த­மான பல­னி­ருக்கும்.  பெண்­க­ளுக்கு மத்­திம பலன். மாண­வர்­க­ளுக்கு முயற்சி தேவை. அனு­கூ­ல­மான நாள் வெள்ளி, நன்­மை­யான திகதி 06.  

03. காரியங்களை திறம்படச் செய்யும் மிதுன ராசி அன்பர்களே!


மிரு­க­சீ­ரிடம் 3,4 ஆம் பாதம் , திரு­வா­திரை, புனர்­பூசம் 1, 2 , 3 ஆம் பாதம் கொண்ட மிது­ன­ரா­சி­யி­ன­ருக்கு எதிர்­பா­ராத திடீர் நன்­மைகள் ஏற்­படும். குடும்ப நிலை சார்ந்த நன்­மைகள் சிறப்­பாக இருக்கும். பண­வ­ரவு மிகவும் திருப்­தி­க­ர­மா­ன­தாக அமையும். தொழில் நிலை சார்ந்த இலா­பங்கள் சிறப்­புற இருக்கும். கடன் நிலை­களில் சுமு­க­மான பலா­பலன் அமையும். உற­வி­னர்­களின் மூல­மாக நன்­மைகள் ஏற்­படும். பெண்­க­ளுக்கு நன்­மை­யுண்டு. மாண­வர்­க­ளுக்கு சிறப்­புண்டு, அனு­கூ­ல­மான நாள் புதன், நன்­மை­யான திகதி 05.    

04. நண்பர்களிடம் அன்பு காட்டும் கடக ராசி அன்பர்களே!


புனர்­பூசம் 4 ஆம் பாதம், பூசம், ஆயி­லியம் கொண்ட கட­க­ரா­சி­யி­ன­ருக்கு தொழில் சார்ந்த  வேலைப்­பளு அனு­கூ­ல­மாக இருக்கும். அலைச்சல் நிலை அதி­க­மி­ருக்கும். பண­வ­ரவு சற்று மத்­தி­ம­மா­ன­தா­கவே இருக்கும். கொடுக்கல் வாங்­கலில் இழு­ப­றி­யான  நிலை­யி­ருக்கும். குடும்ப நிலை சார்ந்த அலைச்சல் நிலை­யி­ருக்கும். கடன் நிலை­களில் இழு­பறி நிலை அமையும்.  பெண்­க­ளுக்கு மத்­திம பலன், மாண­வர்­க­ளுக்கு முயற்சி தேவை. அனு­கூ­ல­மான நாள் திங்கள், நன்­மை­யான திகதி 07. 


05. முன்னேற்றச்செயல்களில் முன்நிற்கும் சிம்ம ராசி அன்பர்களே!


மகம், பூரம், உத்­தரம் 1 ஆம் பாதம் கொண்ட சிம்­ம­ராசி அன்­பர்­க­ளுக்கு எதிர்­பார்ப்­பு­களில் நல்ல வெற்­றிகள் இருக்கும். பண­வ­ரவு மிகவும் திருப்­தி­க­ர­மா­ன­தாக இருக்கும். குடும்ப நிலை சார்ந்த நன்­மைகள் இருக்கும். உற­வி­னர்­களின் மூல­மாக நன்­மைகள் ஏற்­படும். தொழில் சார்ந்த திடீர் அலைச்சல் நிலை­யி­ருக்கும். எதிர்­பா­ராத பிர­யா­ணங்கள் அமையும் பல­னி­ருக்கும். பெண்­க­ளுக்கு மத்­திம பலன், மாண­வர்­க­ளுக்கு சிரம நிலை . அனு­கூ­ல­மான நாள் ஞாயிறு, நன்­மை­யான திகதி 06.        

06. தனித்தன்மையோடு செயல்படும் கன்னி ராசி அன்பர்களே!


உத்­தரம் 2,3,4 ஆம் பாதம், அத்தம், சித்­திரை 1,2 ஆம் பாதம் கொண்ட கன்னி ராசி­யி­ன­ருக்கு     சற்று சிர­ம­மான பலன் இருக்கும். தொழில் சார்ந்த அலைச்சல் நிலை­யி­ருக்கும். பண­வ­ரவு சற்று மத்­தி­ம­மான நிலையில் இருக்கும். கொடுக்கல் வாங்­கலில் சிக்கல் நிலைகள் அமையும். தேவை­யற்ற அலைச்சல் நிலை அமையும் பல­னி­ருக்கும். உடல் நிலை சார்ந்த சிறு சிறு சுக­யீனம் அமையும். பெண்­க­ளுக்கு சஞ்­சல நிலை, மாண­வர்­க­ளுக்கு சஞ்­சல நிலை. அனு­கூ­ல­மான நாள் புதன்,  நன்­மை­யான திகதி 05.

7. எச்சரிக்கையோடு இருக்கும் துலா ராசி அன்பர்களே!


சித்­திரை 3 ,4 ஆம் பாதம், சுவாதி, விசாகம் 1,2 ,3 ஆம் பாதம் கொண்ட துலா­ரா­சி­யி­ன­ருக்கு     அலைச்சல் நிலை அதி­க­மி­ருக்கும். தொழில் சார்ந்த வேலைப்­பளு அதி­க­மாக அமையும். குடும்ப நிலையில் மந்­த­மான பலா பலன் இருக்கும். கொடுக்கல் வாங்­கலில் இழு­பறி நிலைகள் அமையும்.  பண­வ­ரவு சற்று மத்­தி­ம­மா­ன­தா­கவே இருக்கும். தேவை­யற்ற அலைச்சல் நிலைகள் அதி­க­மாக இருக்கும். பெண்­க­ளுக்கு சிரம நிலை,  மாண­வர்­க­ளுக்கு சஞ்­சல நிலை. அனு­கூ­ல­மான நாள் வெள்ளி. நன்­மை­யான திகதி 06. 

08. கலை நுணுக்கத்தோடு செயல்படும் விருச்சிக ராசி அன்பர்களே!

விசாகம் 4 ஆம் பாதம், அனுஷம்,  கேட்டை கொண்ட விருட்­சிக ராசி­யி­ன­ருக்கு குடும்ப நிலை சார்ந்த நன்­மைகள் இருக்கும். பண­வ­ரவு ஓர­ள­விற்கு தேவை­களைப் பூர்த்­தி­யாக்கும். குடும்ப நிலை சார்ந்த திடீர் நன்­மைகள் இருக்கும். கொடுக்கல் வாங்­கலில் சுமு­க­மான நிலை அமையும். எதிர்­பா­ராத திடீர் நன்­மைகள் அமையும். உற­வி­னர்­களின் மூல­மாக நன்­மைகள் இருக்கும். பெண்­க­ளுக்கு நன்­மை­யுண்டு, மாண­வர்­க­ளுக்கு சிறப்­புண்டு, அனு­கூ­ல­மான நாள் திங்கள்,  நன்­மை­யான திகதி 04.

09.பிறரது விருப்பத்தை நிறைவேற்றும் தனுசு ராசி அன்பர்களே!


மூலம், பூராடம், உத்­த­ராடம் 1 ஆம் பாதம் கொண்ட தனுசு ராசி­யி­ன­ருக்கு சற்று மந்­த­மான  பலா­பலன் அமையும். தொழில் சார்ந்த வேலைப்­பளு அதி­க­மாக இருக்கும். பண­வ­ரவு சற்று மத்­தி­ம­மா­ன­தா­கவே இருக்கும். எதி­ரி­களின் மூல­மாக சி்க்கல் நிலைகள் ஏற்­படும்.  கடன் நிலை சார்ந்த இழு­பறி நிலைகள் தொடரும். உற­வி­னர்­க­ளுடன் சற்று சஞ்­சல நிலை இருக்கும். பெண்­க­ளுக்கு சஞ்­சல நிலை, மாண­வர்­க­ளுக்கு சிரம நிலை. அனு­கூ­ல­மான நாள் வியாழன், நன்­மை­யான திகதி 03.      

10. உறுதியான உள்ளம் கொண்ட மகர ராசி அன்பர்களே!உத்­த­ராடம் 2,3,4  ஆம் பாதம், திரு­வோணம், அவிட்டம் 1,2ஆம் பாதம் கொண்ட மகர ராசி­யி­ன­ருக்கு அனு­கூ­ல­மான நன்­மைகள் அமையும் நிலை­யி­ருக்கும். குடும்ப நிலை சார்ந்த எதிர்­பா­ராத நன்மை இருக்கும். பண­வ­ரவு மிகவும் திருப்­தி­க­ர­மா­ன­தாக அமையும். கடன் நிலை­களில் சுமு­க­மான பலன் இருக்கும். தொழில் சார்ந்த இலா­பங்கள் அமையும் பல­னி­ருக்கும். உற­வி­னர்­களின் மூல­மாக நன்­மை­யி­ருக்கும். பெண்­க­ளுக்கு நன்­மை­யுண்டு,  மாண­வர்­க­ளுக்கு சிறப்­புண்டு, அனு­கூ­ல­மான நாள் ஞாயிறு, நன்­மை­யான திகதி 07.

11. தெளிவான சிந்தனை கொண்ட கும்ப ராசி அன்பர்களே!அவிட்டம் 3,4 ஆம் பாதம், சதயம், பூரட்­டாதி 1,2,3 ஆம் பாதம் கொண்ட  கும்­ப­ரா­சி­யி­ன­ருக்கு சற்று மத்­தி­ம­மான பலனே இருக்கும். தொழில் சார்ந்த வேலைப்­பளு அமையும். குடும்ப நிலையில் சிறு சிறு மந்த நிலை இருக்கும். கொடுக்கல் வாங்­கலில் இழு­பறி நிலை அமையும். கடன் நிலை­களில் சற்று இழு­பறி நிலை இருக்கும் தாயார் வழியில் திடீர் செல­வீனம் அமையும் பெண்­க­ளுக்கு சிரம நிலை,  மாண­வர்­க­ளுக்கு நன்­மை­யுண்டு.  அனு­கூ­ல­மான நாள் திங்கள், நன்மையான திகதி 08. 


12. திறமையோடு கூடிய ஆற்றல் கொண்ட மீன ராசி அன்பர்களே!


பூரட்டாதி 4 ஆம் பாதம், உத்தரட்டாதி, ரேவதி  கொண்ட மீன ராசியினருக்கு வேலைப்பளு அதிகமாக அமையும்.  எடுக்கும் முயற்சிகளில்  தடை தாமத நிலையிருக்கும். பணவரவு சற்று மத்திமமானதாகவே இருக்கும். கடன் நிலைகளில் சற்று இழுபறி நிலையிருக்கும். சகோதரர்களுடன் சற்று சிரம நிலை இருக்கும் . தொழில் சார்ந்த வேலைப்பளு அதிகமாக இருக்கும்.  பெண்களுக்கு மத்திம பலன், மாணவர்களுக்கு அலைச்சல் நிலை. அனுகூலமான நாள் வியாழன்,  நன்மையான திகதி 03.