எல்லோருடைய இதயத்திலும் காயங்கள் உண்டு. சிலர்கண்ணீராக, சிலர் புன்னகையாக வெளிப்படுத்துவர்: இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (28.05.2019 )...!

Published on 2019-05-28 09:43:38

28.05.2019 ஸ்ரீ விகாரி வருடம் வைகாசி மாதம் 14 ஆம் நாள் செவ்­வாய்க்­கி­ழமை. 

கிருஷ்ண பட்ச நவமி திதி பகல் 01.07 வரை. அதன்மேல் தசமி திதி. பூரட்­டாதி நட்­சத்­திரம் மாலை 6.40 வரை. பின்னர் உத்­த­ரட்­டாதி நட்­சத்­திரம். சிரார்த்த திதி தேய்­பிறை தசமி. மர­ண­யோகம். கீழ்­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள் மகம், பூசம். சுப­நே­ரங்கள்: பகல் 10.30–11.30. மாலை 4.30–5.30 ராகு­காலம் 3.00–4.30. எம­கண்டம் 9.00–10.30. குளி­கை­காலம் 12.00–1.30 வார­சூலம் – வடக்கு (பரி­காரம்– பால்). 

மேடம் : உண்மை, உறுதி

இடபம் : நன்மை, அதிர்ஷ்டம்

மிதுனம் : நிறைவு, பூர்த்தி

கடகம் : தனம், சம்­பத்து

சிம்மம் : கோபம், சினம்  

கன்னி : பகை, விரோதம் 

துலாம் : இன்பம், மகிழ்ச்சி 

விருச்­சிகம் : போட்டி, ஜெயம்

தனுசு : புகழ், பெருமை

மகரம் : செலவு, விரயம்

கும்பம் : வெற்றி, அதிர்ஷ்டம்

மீனம் : ஆசி, வாழ்த்து

கண்­ணனின் ஐந்தாம் திரு­முகம். ராஜ மன்னார் குடி என்ற ஸ்ரீ வைஷ்­ணவ திவ்­ய­தேசம் துவா­ர­கையில் சேவை சாதிக்கும் கண்­ண­னையே இங்கு வண்­து­வா­ர­கா­பதி மன்­ன­னாக நம்­மாழ்வார் அனு­ப­வித்தார். ஸ்ரீ ராஜ­கோ­பாலன் “கோ” சப்தம் பசு­மா­டு­க­ளையும் “பாலன்” என்­பது காப்­பா­ள­னையும் குறிக்கும். இடையர் குலத்­திலே ராஜா­வாக சேவை சாதிக்­கின்றான். “உன்­னித்து மற்­றொரு தெய்வம் தொழாள் அவ­னை­யல்லால் நும்­மிச்சை சொல்லி நும்தோள் குலைக்­கப்­படும் அன்னை மீர்” மன்­னப்­படு மறை­வா­ணனை வண்­து­வா­ர­கா­பதி மன்­னனை ஏத்­துமின் ஏத்­து­தலும் தொழு­தா­குமே – நம்­மாழ்வார் திருவாய் மொழி (4 – 6 – 10) (நாளை ஆறாம் திரு­முகம் தொடரும்) 

சூரியன், செவ்வாய் ஆதிக்கம் கொண்ட இன்று.

அதிர்ஷ்ட எண்கள்: 1 – 5

பொருந்தா எண்கள்: 8 – 2

அதிர்ஷ்ட  வர்ணங்கள்: மஞ்சள் கலந்த வர்ணங்கள் 

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

logo