கஷ்டப்படுபவனிடம் சிரிப்பு இருக்காது, சிரிப்பவனிடம் கஷ்டம் இருக்காது, ஆனால் கஷ்டத்திலும் சிரிப்பவனிடம் தோல்வி இருக்காது.: இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (23.05.2019 )...!

Published on 2019-05-23 09:53:45

23.05.2019 ஸ்ரீவி­காரி வருடம் வைகாசி மாதம் 09 ஆம் நாள் வியா­ழக்­கி­ழமை.

கிருஷ்ண பட்ச பஞ்­சமி திதி பின்­னி­ரவு 5.38 வரை. அதன் மேல் சஷ்டி திதி. பூராடம் நட்­சத்­திரம் காலை 6.43 வரை. பின்னர் உத்­தி­ராடம் நட்­சத்­திரம். சிரார்த்த திதி தேய்­பிறை பஞ்­சமி. சித்­த­யோகம். கீழ்­நோக்­குநாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­திரம் திரு­வா­திரை. சுப நேரங்கள் பகல் 10.30– 11.30 மாலை 4.30– 5.30 ராகு­காலம் 1.30 –3.00 எம­கண்டம் 6.00 –7.30 குளிகை காலம் 9.00 –10.30 வார­சூலம் தெற்கு (பரி­காரம் தைலம்) தனி­யநாள் சுப முகூர்த்த நாள்

மேடம் : நட்பு, மன­நி­றைவு

இடபம் : அன்பு, ஆத­ரவு

மிதுனம் : செலவு, பொருள்­வி­ரயம்

கடகம் : கோபம், பகை

சிம்மம் : அமைதி, தெளிவு

கன்னி : வெற்றி, அதிர்ஷ்டம்

துலாம் : போட்டி, ஜெயம்

விருச்­சிகம் : நன்மை, அதிர்ஷ்டம்

தனுசு : புகழ், பெருமை

மகரம் : சுகம், ஆரோக்­கியம்

கும்பம் : பகை, விரோதம்

மீனம் : நிறைவு, மகிழ்ச்சி

கண்­ணனின் திரு­மு­கங்கள் ஆறு. ஸ்ரீவைஷ்­ணவ திவ்ய தேஷங்கள் 108 க்குள் 6 ஸ்தலங்கள் கிருஷ்ண சேத்­தி­ரங்­க­ளாக போற்­றப்­ப­டு­கின்­றன. அவை 1.திரு­கண்­ண­புரம் 2.திருக்­கண்­ணன்­குடி 3.திருக்­கோ­வலூர் 4.திருக்­கண்ண மங்கை 5.கபிஸ்­தலம் 6.துவா­ர­கா­புரி 7.திருக்­கண்­ண­புரம் மூலவர் நீல­மேகப் பெருமாள். சௌரி­ராஜன் கிழக்கே திரு­முக மண்­டலம் நின்ற திருக்­கோலம் தாயார் கண்­ண­புர நாயகி. விமானம் உத்­பலா வதக விமானம். தீர்த்தம் “மெய்­ய­னாரும் விரும்பித் தொழு­வார்க்­கெல்லாம் பொய்­ய­னாகும் புறமே தொழு­வார்க்­கெல்லாம் செய்யில் வாளை­யு­கலும் திருக்­கண்­ண­பு­ரத்து ஐயன் ஆகத்­த­னைப்­பார்­கட்கு அணி­யனே” நம்­மாழ்வார் திரு­வாய்­மொழி (9–10–7) நாளை திருக்­கண்­ணங்­குடி தொடரும்.

புதன், ராகு கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள்: 1–5–9

பொருந்தா எண்: 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், வெளிர் நீலம்

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

logo