தவறே செய்யாத மனிதன் இல்லை, தவறை திருத்திக் கொள்ளாதவன் மனிதனே இல்லை: இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (21.05.2019 )...!

Published on 2019-05-21 09:38:46

21.05.2019 ஸ்ரீ விகாரி வருடம் வைகாசி மாதம் 07 ஆம் நாள் செவ்வாய்க்கிழமை

கிருஷ்ண பட்ச திரிதியை திதி பின்னி ரவு 3.18 வரை. அதன் மேல் சதுர்த்தி திதி. மூலம் நட்சத்திரம் பின்னிரவு 5.05 வரை. பின்னர் பூராடம் நட்சத்திரம். சிரார்த்த திதி தேய்பிறை திரிதியை. அமிர்த சித்தயோகம். கீழ்நோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரம் ரோகிணி. கரிநாள் (சுபம் விலக்குக). சுபநேரங்கள் பகல் 10.30–11.30, மாலை 4.30–5.30, ராகுகாலம் 3.00–4.30, எமகண்டம் 9.00 –10.30, குளிகை காலம் 12.00–01.30, வாரசூலம் வடக்கு. (பரிகாரம் பால்)  

மேடம் :காரியசித்தி, அனுகூலம்

இடபம் : பகை, பயம்

மிதுனம் : உயர்வு, மேன்மை

கடகம் : நலம், ஆரோக்கியம்

சிம்மம் : கவலை, கஷ்டம்

கன்னி : அன்பு, ஆதரவு

துலாம் : அமைதி, தெளிவு

விருச்சிகம் : சிரமம், தடை

தனுசு : ஏமாற்றம், கவலை

மகரம் : திடம், உறுதி

கும்பம் : இலாபம், லக்ஷ்மீகரம்

மீனம் : சுகம், போஜனம்

குருபூஜை திருஞானசம்பந்தர். ''காழியர் பெருமான்'' கோடி சூரிய பிரகாசத்துடன் சிவ ஜோதியில் கலந்தவர். அன்பும் அறமும் அருளும் கொண்ட உமையாளின் திருமுலைப் பாலுண்ட புண்ணியத்தின் பயனாக திருநீலகண்ட யாழ்பாணர், திருநீலநக்கர், அருந்தவசிகன், மறை முனிகள், ஆலயம் தொழவந்த சால்புடை மக்கள் எல்லோருடனுமாக சிவஜோதியில் கலந்து பேரின்ப வீட்டுக்கு வழிகாட்டியவர் எம்பிரான் சம்பந்தன் அடியார்க்கும் அடியேன்.

குரு, சந்திரன் கிரகங்களின் ஆதிக்க நாள் இன்று.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 7, 3

பொருந்தா எண்கள்: 6, 9, 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்: வெளிர்மஞ்சள், இளஞ்சிவப்பு

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

logo