நாமும் நல்லவர்களே அடுத்தவர் தவறை சுட்டிகாட்டும் போது மட்டும்: இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (19.04.2019 )...!

Published on 2019-04-19 10:16:41

19.04.2019 ஸ்ரீ விகாரி வருடம்   சித்­திரை மாதம் 6ஆம் நாள் வெள்­ளிக்­கி­ழமை  

பௌர்­ணமி திதி   நாளை  5.27 வரை.  அதன்மேல் பிர­தமை திதி. சித்­திரை நட்­சத்­திரம் பின்­னி­ரவு 8.15 வரை.  பின்னர்  சுவாதி நட்­சத்­திரம்.   சிரார்த்த திதி  பௌர்­ணமி. சித்­த­யோகம் கரிநாள்.  சமநோக்கு நாள்.  சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள் உத்­தி­ரட்­டாதி, ரேவதி. சுப­நே­ரங்கள் காலை 9.30 –- 10.30 , மாலை  4.30-–5.30. இராகு காலம் 10.30–-12.00 எம­கண்டம் 3.00–-4.30,  குளிகை காலம் 7.30-–9.00.

வார­சூலம்  மேற்­கு. ­ப­ரி­காரம்  வெல்லம்.   பௌர்­ணமி விரதம்.   தெஹி­வளை  விஷ்ணு ஆ­ல­யத்தில்    பகல்  சத்­தி­ய­நா­ரா­யண  பூஜை,  அன்­ன­தானம். சித்­திரா பௌர்­ணமி,  சித்­திர குப்த பூஜை,   இசை­ஞா­னியார் குரு­பூஜை, திரு­மா­லி­ருஞ் ­சோலை  ஸ்ரீ கள்ள­ழகர் ஆயிரம் பொன் சப்பறத்­துடன் வைகை எழுந்­த­ருளல்

மேடம் : வரவு, இலாபம்

இடபம் : சிக்கல், சங்­கடம்

மிதுனம் : நோய், வருத்தம்

கடகம் : பகை, விரோதம்

சிம்மம் : வெற்றி, அதிர்ஷ்டம்

கன்னி : போட்டி, ஜெயம்

துலாம் : பகை, பயம்

விருச்சிகம் :  நட்பு, உதவி

தனுசு : தடை , இடை­யூறு

மகரம் : மகிழ்ச்சி, நிறைவு

கும்பம் : இலாபம், ஆதாயம்

மீனம்: சுகம், இன்பம்

'ஸ்ரீ வைஷ்­ணவம்' மதுர கவி­யாழ்வார்    திரு­நட்­சத்­திரம்.  ஏரார் மது­ர­கவி இவ்­வு­லகில் வந்துதித்த  சீராரும் சித்­தி­ரையில் சித்­திரை நாளின்று. அரு­ளிய பிர­பந்தம்   கண்ணி நுண்  சிறுத்­தாம்பு  நம்­மாழ்வார் புகழை சங்­கப்­பு­ல­வர்­க­ளோடு வாதாடி   பாட ­வைத்­தவர்.  அப்­பாடல் சேமம்  குரு­கையோ  செய்­ய­தி­ருப்­பாற் ­க­டலோ நாமம் பராங்­கு­சமோ  நார­ணமோ  ஈயா­கு­வதோ  கருடற்கெதிரே இரவிக் கெதிரே மின்­மி­னி­யா­கு­வதோ, நாயா­கு­வதோ,  உறு­வெம்­புலி முன் நரி­யா­கு­வதோ,  நர­கே­சரி முன் பேயா­கு­வதோ,  அழகு ஊர்­வசி முன்  பெருமாள் வகுணா பரணன்  அருள் கூர்ந்து மறையின்  ஒரு சொற் பெறுமோ உலகிற் கவியே  என்று   நம் ஆழ்வார் புகழை தமிழ் சங்கப் புல­வர்கள் வாயால் பாட ­வைத்­தவர்.  (நாளை  சைவ­சித்­தாந்தம் தொடரும்)

சூரியன், சனி கிரகங்களின் 

ஆதிக்க நாள் இன்று.

அதிர்ஷ்ட எண்கள் 1-,5

பொருந்தா எண் 8

அதிர்ஷ்ட வர்ணங்கள் மஞ்சள், பச்சை

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை  ஸ்ரீ விஷ்ணு கோயில்)