குறிக்கோள் இல்லாத வாழ்க்கை வெறும் குப்பை மேடு தான்: இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (08.04.2019 )...!

Published on 2019-04-08 09:52:48

08.04.2019 விளம்பி வருடம் பங்­குனி மாதம் 25 ஆம் நாள் திங்­கட்­கி­ழமை

சுக்­கில பட்ச திரி­தியை திதி மாலை 4.01 வரை. அதன் மேல் சதுர்த்­தி திதி. பரணி நட்­சத்­திரம் காலை 9.33 வரை. பின்னர் கார்த்­திகை நட்­சத்­திரம். சிரார்த்த திதி வளர்­பிறை திரி­தியை. சித்­த­யோகம் காலை 9.33 வரை. பின்னர் மரண யோகம். சுப­நே­ரங்கள் காலை 9.30 – 10.30, மாலை 4.30 –5.30, ராகு­காலம் 7.30 –9.00, எம­கண்டம் 10.30 –12.00, குளிகை காலம் 1.30 –3.00, வார­சூலம் கிழக்கு. (பரி­காரம் தயிர்)  கார்த்­திகை விரதம். முரு­கனை வழி­படல் நன்று.

மேடம் : செலவு, விரயம்

இடபம் : ஆதாயம், இலாபம்

மிதுனம் : சுகம், ஆரோக்­கியம்

கடகம் :  புகழ், பெருமை

சிம்மம் : பயம், விரோதம்

கன்னி : நற்­செய்தி, பாராட்டு

துலாம் : நன்மை, யோகம்

விருச்­சிகம் : போட்டி, ஜெயம்

தனுசு : உயர்வு, மேன்மை

மகரம் : பகை, விரோதம்

கும்பம் : உதவி, நட்பு

மீனம் : அமைதி, சாந்தம்

சிவனின் மூவகை வடிவ நிலைகள் சிவனின் அரு­வத்­திரு மேனி நிட்­க­ளத்­தி­ரு­மேனி எனப் பெறும். கண்­களால் காணப்­பெறும் காட்சி யாவையால் அறி­யப்­பட இயலாமல் கருதல் அள­வையால் அறி­யப்­பட இய­லாமல் கண்­ணுக்கு புல­னா­காது. காற்­று­வ­டிவம் சிவனின் அருவ வடி­வுக்கு எடுத்­துக்­காட்­டாகும். (நாளை உரு­வத்­தி­ரு­மேனி தொடரும்)

சனி, சுக்­கிரன் கிர­கங்­களின் ஆதிக்க நாள் இன்று.

அதிர்ஷ்ட எண்: 6 

பொருந்தா எண்: 8, 3

அதிர்ஷ்ட வர்ணங்கள்: நீலம், பச்சை

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)