28.03.2016 மன்மத வருடம் பங்குனி மாதம் 15 ஆம் நாள் திங்கட்கிழமை

Published on 2016-03-28 07:47:31

கிருஷ்ணபட்ச பஞ்சமி திதி பின்னிரவு 3.09 வரை. அதன் மேல் சஷ்டி திதி அனுஷம் நட்சத்திரம் நாள் முழுவதும் (நட்சத்திர திரிதியை பிருக்கு) சிரார்த்த திதி தேய்பிறை பஞ்சமி. சித்தியோகம் கரிநாள் சுபம் விலக்குக. சமநோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரம் பரணி. சுபநேரங்கள் காலை 6.30– 7.30, மாலை 4.30– 5.30, ராகு காலம் 7.30– 9.00, எமகண்டம் 10.30– 12.00, குளிகை காலம் 1.30– 3.00, வார சூலம் கிழக்கு (பரிகாரம் – தயிர்) ரங்க பஞ்சமி ??? விரதம் அனந்தாதி நாக பூஜை. 

மேடம்: கவலை, கஷ்டம்

இடபம்: வரவு, லாபம்

மிதுனம்: தடை, தாமதம்

கடகம்: செலவு, விரயம்

சிம்மம்: அன்பு, ஆதரவு 

கன்னி: அசதி, வருத்தம்

துலாம்: வெற்றி, அதிர்ஷ்டம்

விருச்சிகம்: யோகம், அதிர்ஷ்டம்

தனுசு: நன்மை, வரவு

மகரம்: அமைதி, சாந்தம்

கும்பம்: செலவு, விரயம்

மீனம்: பயம், மனக்கிலேசம்

“குலசேகர ஆழ்வார்” அருளிய நான்காம் திருமொழி. திவ்ய பிரபந்தம். திருப்பதியில் பிறக்க ஆழ்வார் அவாவுறுகின்றார். பாசுரம்” ஊனேறு செல்வத்து உடல் பிறவியான் வேண்டேன். ஆனே றேழ் வென்றான் அடிமைத் திறமல்லால் கூனேறு சங்கமிடத்தான் தன் வேங்கடத்து கோனேரி வாழும் குருகாய் பிறப்பேனே பொருளுரை: சதை வளர்ந்து தள தளப்பாக உடல் இருக்கும் இம்மனிதப் பிறவி இனி எனக்கு வேண்டாம். நப்பின்னைப் பிராட்டியின் பொருட்டு ஏழு எருதுகளை வென்றவனான துவாரகா கண்ணனுக்கு கைங்கரியம் செய்வதையே நான் வேண்டுகிறேன். பாஞ்சசன்னியம் என்ற சங்கை உடையவனான ஸ்ரீ வேங்கடேசன் வாழும் திருக்கோனேரி என்று அழைக்கப்படும் சுவாமி புஷ்கரணி திருக்குளத்தல் ஒரு நாரையாகவாவது பிறந்து வாழ ஆசைப்படுகின்றேன். இந் நாரையை ஒரு பருந்தோ அல்லது ஒரு கழுகோ கொன்றுவிட்டால் நான் என்ன செய்வது என்று மீண்டும்  ஆழ்வார் கவலைப்படுகின்றார்” (ஆழ்வார் திருவடிகளே சரணம்)

“சுறுசுறுப்பானவனுக்கு வாரத்தில் இன்றே ஏழுநாள். சோம்பேறிக்கு ஏழு நாளும் நாளையே”) 

சூரியன் ராகு கிரகங்களின் ஆதிக்க நாள் இன்று

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5

பொருந்தா எண்: 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், வெளிர் நீலம்

இராமரத்தினம் ஜோதி (தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)