26.03.2016 மன்மத வருடம் பங்குனி மாதம் 13 ஆம் நாள் சனிக்கிழமை.

Published on 2016-03-26 08:48:10

சுபயோகம்

26.03.2016 மன்மத வருடம் பங்குனி மாதம் 13 ஆம் நாள் சனிக்கிழமை. 

கிருஷ்ணபட்ச திரிதியை திதி முன்னிரவு 11.53 வரை. அதன் மேல் சதுர்த்தி திதி. சுவாதி நட்சத்திரம் பின்னிரவு 2.55 வரை. பின்னர் விசாகம் நட்சத்திரம் சிரார்த்த திதி தேய்பிறை திரிதியை அமிர்த சித்தயோகம். சமநோக்கு நாள் சந்திராஷ்டம நட்சத்திரம் ரேவதி. சுபநேரங்கள் பகல் 10.30– 11.30, மாலை 4.30– 5.30, ராகு காலம் 9.00– 10.30, எமகண்டம் 1.30– 3.00, குளிகை காலம் 6.00– 7.30, வார சூலம் கிழக்கு (பரிகாரம் தயிர்) காரைக்கால் அம்மையார் குரு பூஜை தினம்

மேடம்: பொறுமை, நிதானம்

இடபம்: உழைப்பு, உயர்வு

மிதுனம்: அமைதி, நிம்மதி

கடகம்; நலம், ஆரோக்கியம்

சிம்மம்: சுபம், மங்கலம்

கன்னி: தனம், சம்பத்து

துலாம்: புகழ், பாராட்டு

விருச்சிகம்: கவனம், எச்சரிக்கை

தனுசு: சினம், பகை

மகரம்: நன்மை, யோகம்

கும்பம்: லாபம், ஆதாயம்

மீனம்: சுகம், ஆரோக்கியம்

திருப்பாணாழ்வார் அருளிச் செய்த “அமலனாதிபிரான்” பாசுரம் 10 “கொண்டல் விண்ணனைக் கோவலனாய் வெண்ணெய் உண்டவாயன என்னுள்ளம் கவர்ந்தானை அண்டர்கோன் அணி அரங்கன என்னமுதனைக் கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே. பொருளுரை: கார்மேகம் போன்ற நிறமுடையவளான ஆயர் பாடி துவாரகா, கண்ணணாய் பிறந்து வெண்ணெய் உண்ட திருவாயனை என் உள்ளத்தை கொள்ளை கொண்டவனை, அண்டங்களுக்கெல்லாம் அரசனை பூவுலக்கு அலங்காரமான ஸ்ரீ ரங்கத்தில் உறைபவனை எனக்கு அமிர்தமாக இருப்பவனை கண்ட கண்கள் வேறெதையும் இனிமேல் பார்க்காது. (ஆழ்வார் திருவடிகளே சரணம்) அமலனாதி பிரான் முற்றிற்று.

(“எஜமான் என்பவன் சில நேரம் குருடாகவும் சல நேரம் செவிடாகவும் இருக்க வேண்டும்.) 

சனி சந்திரன் கிரகங்களின் ஆதிக்க நாளின்றி

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 7

பொருந்தா எண்கள்: 8, 9

அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், பச்சை