முருகேசு சிவசிதம்பரம் நூற்றாண்டு நினைவுதின நிகழ்வு

2023-07-20 15:55:26
மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சிவசிதம்பரம் அவர்களின் நூற்றாண்டு நினைவுதின நிகழ்வு இன்று வியாழக்கிழமை(20) காலை இடம்பெற்றது.
சிவசிதம்பரம் அவர்களின் இல்லத்திலும் நெல்லியடியில் அமைந்துள்ள சிவசிதம்பரததின் சிலையடியில் நினைவு தின நிகழ்வுகள் இடம்பெற்றது.
இதன்போது உருவச் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டதோடு உயர்கல்விக்கான புலமைப்பரிசல்களும் வழங்கப்பட்டன.
முருகேசு சிவசிதம்பரம் (ஜுலை 20, 1923 - ஜுன் 5, 2002) இலங்கைத் தமிழ் அரசியலில் நீண்டகாலம் செயற்பட்டதுடன் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த ஒரு வழக்கறிராவார். நாடாளுமன்ற துணை சபாநாயகராகவும் 1968 முதல் 1970 வரை பணியாற்றினார்.
நடைபெற்ற நினைவேந்தலில் சிவசிதம்பரம் அவர்களின் குடும்பத்தினர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், சென்னை உச்ச நீதிமன்ற சட்டத்தரணி கோபிநாத் மற்றும் சென்னை பல்கலைக்கழக பேராசிரியர் மதிவாணன் பேராசிரியர் தேவராஜ் மற்றும் ஊர்மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
image
image
image
image
image
image
image
image
image
image
image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right