வீரகேசரி பிரீமியர் லீக்கில் வீ 8 அணி சம்பியன்

2023-06-06 17:22:50
(எம்.எம்.சில்வெஸ்டர்)

(படப்பிடிப்பு ஜே. சுஜீவ குமார் )

வீரகேசி ஊழியர் நலன்புரி சங்கம் ஏற்பாடு செய்த வீரகேசரி பிரீமியர் லீக் சிநேகபூர்வ கிரிக்கெட் போட்டித் தொடரின் இறுதிப் போட்டியில் எக்ஸ்பிரெஸ் ஈகிள்ஸ் அணியை வீழ்த்திய டி.ரவி ‍தலைமையிலான வீ 8 அணி சம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது.

கடந்த ஞாயிறன்று (04) கொழும்பு -5 நாரஹேன்பிட்டி, ஷாலிக்கா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த மென்பந்து சுற்றுத் தொடரில் குறித்தவொரு அணியில் ஒரு பெண் போட்டியாளர் உட்பட ஆறு ஆண் போட்டியாளர்களைக் கொண்ட அணிக்கு 7 பேர் கொண்ட 8 அணிகள் பங்கேற்றிருந்தன.

இரண்டு குழுக்களில் தலா 4 அணிகள் இடம்பெற்றிருந்த இப்போட்டித் தொடரின் குழு ஏயில் எச்.எம்.குமார தலைமையிலான கொலம்போ டைட்டன்ஸ், எஸ். ரமேஷ் தலைமையிலான எக்ஸ்பிரேஸ் ஈகிள்ஸ், கென்ட் பிரேசர் தலைமையிலான லிட்டில் பூமா, ஜீ. ஜெகதீசன் தலைமையிலான 8 ஸ்டார்ஸ் ஆகிய 4 அணிகள் இடம்பெற்றன.

பீ குழுவில் எஸ்.பிரேமநாதன் தலைமையிலான நைட் வோரியர்ஸ், ஜீ.வி.சஞ்சீவ தலைமையிலான தி லயன்ஸ், குமார தலைமையிலான தண்டர் டைகர்ஸ், டி.ரவி தலைமையிலான வீ 8 ஆகிய 4 அணிகள் அங்கம் வகித்தன.

தத்தம் குழுக்களில் உள்ள ஏனைய 3 அணிகளையும் தலா ஒரு முறை எதிர்த்தாடியிருந்தன. தத்தம் குழுக்களில் புள்ளிகள் பட்டியில் முதல் இரண்டு இடங்களையும் பிடித்திருந்த அணிகள் அரை இறுதிச் சுற்றுக்கு முன்னேறிக்கொண்டன.
இதன்படி, குழு ஏயில் இடம்பெற்றிருந்த கொலம்போ டைட்டன்ஸ் அணி 3 போட்டிகளில் விளையாடி 6 புள்ளிகளுடனும், எக்ஸ்பிரெஸ் ஈகிள்ஸ் 3 போட்டிகளில் விளையாடி 2 போட்டிகளில் வெற்றியீட்டி 4 புள்ளிகளுடன் அரை இறுதிச் சுற்றுக்கு ‍முன்னேறிக்கொண்டன.
மறு மு‍னையில், 3 போட்டிகளில் விளையாடி 3 வெற்றிகளுடனும் 6 புள்ளிகளைப் பெற்ற நைட் வோரியர்ஸ் , அணி 3 போட்டிகளில் விளையாடி 2 வெற்றிகளுடன் 4 புள்ளிகளைப் பெற்ற வீ 8 அணி ஆகிய இரண்டு அணிகள் குழு பீ சார்பாக அரை இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றன.
முதலாவது அரை இறுதிப் போட்டியில் 20 ஓட்டங்களால் வெற்றியீட்டிய வீ 8 அணி முதல் அணியாக இறுதிப் போட்டிக்கு நுழைந்தது. இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய வீ 8 அணி நிசாந்தன் 37 ஓட்டங்கள் , சிவா 16 ஓட்டங்கள், சதீஸ் 10 ஓட்டங்கள் பெற்றுக்கொடுக்க அவ்வணி 64 ஓட்டங்களை குவித்தது. பந்துவீச்சில் ரஹ்மான் ரஹ்மான் ஒரு விக்கெட்டை கைப்பற்றினார்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கொலம்போ டைட்டன்ஸ் அணி 44 ஓட்டங்களை மாத்திரம் பெற்று ஓட்டங்களை மாத்திரம் பெற்று 20 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியது. துடுப்பாட்டத்தில் அவ்வணி சார்பில் ரஹ்மான் 16 ஓட்டங்களையும், நளின் 15 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்ததுடன், அவ்வணியின் நட்சத்திர வீரரான தினேஷ்கர் ஓட்டமெதனையும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். பந்துவீச்சில் சிவா 2 விக்கெட்டுக்களையும், அணித் தலைவர் ரவி ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இரண்டாவது அரை இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய எக்ஸ்பிரெஸ் ஈகிள்ஸ் அணி 4 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 81 ஓட்டங்களை குவித்தது. துடுப்பாட்டத்தில் லோகேஷ் 32 ஓட்டங்களையும், மதன் 20 ஓட்டங்களையும், பிரேம்16 ஓட்டங்களையும், அணித்தலைவர் ரமேஷ் 4 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
பந்துவீச்சில் நைட் வோரியர்ஸ் அணி சார்பாக சியாம் மற்றும் அணித்தலைவர் பிரேமநாதன் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டை கைப்பற்றினர்.
82 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய நைட் ரைடர்ஸ் அணி 4 ஓவர்களில் 39 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியடைந்தது. 42 ஓட்டங்களால் வெற்றியீட்டிய எக்ஸ்பிரெஸ் ஈகிள்ஸ் இரண்டாவது அணியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
வீ.பி.எல் -2023 சம்பியன் அணியை தீர்மானிக்கும் இறுதிப் போட்டியில் வீ 8 மற்றும் ஈகிள் எக்ஸ்பிரெஸ் அணிகள் மோதிக்கொண்டன. இறுதிப் போட்டியின் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட எக்ஸ்பிரேஸ் ஈகிள்ஸ் அணியின் துடுப்பாட்ட வீரர்கள் சோபிக்கத் தவறியதால் மிகப் பெரிய ஓட்ட எண்ணிக்கையை எடுக்கவில்லை. அவ்வணி 3.4 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 36 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.
இலகுவான இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடுவதற்காக ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய சிவா மற்றும் நிசாந்தன் ஜோடி 2.3 ஓவர்களில் விக்‍கெட் இழப்பின்றி, 37 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை அடைந்து வெற்றியீட்டி சம்பியன் பட்டத்தை வென்றெடுத்து. ரமேஷ் குமார் தலைமையிலான எக்ஸ்பிரெஸ் ஈகிள்ஸ் அணி உப சம்பியனானது.
இப்போட்டித் தொடரின் சிறந்த துடுப்பாட்ட வீரராக கொலம்போ டைட்டன்ஸ் அணியின் தினேஷ்கர் தெரிவு செய்யப்பட்டார். இப்போட்டித் தொடரின் சிறந்த பந்து வீச்சாளராகவும், போட்டித் தொடரின் நாயகனாவும் வீ 8 அணியின் சிவா வென்றெடுத்தார்.
இப்போட்டித் தொடரின் பரிசில்களை எக்ஸ்பிரெஸ் நியூஸ்பேப்பர்ஸ் சிலோன் லிமிட்டெட் நிறுவனத்தில் முகாமைத்துவ பணிப்பாளர் குமார் நடேசன், நிறுவனத்தின் பிரதம செயற்பாட்டு அதிகாரி எம். செந்தில்நாதன், வீரகேசரி நாளிதழ் மற்றும் வார இதழ் ஆகியவற்றின் பிரதம ஆசிரியர் எஸ். ஸ்ரீகஜன், நிறுவன பராமரிப்பு முகாமையாளர் வாசுதேவன் உள்ளிட்ட அதிகாரிகள் வெற்றிக் கிண்ணங்களையும் பரிசில்களையும் வழங்கினர்.
சம்பியனான வீ 8 அணியில் எஸ்.சுபா தர்ஷினி, டி. ரவி (அணித்தலைவர்), வீ. சிவா, கே. நிசாந்தன், எம்.பைரூஸ், சதீஸ் குமார், ஏ.சுதீபன், கே.திவாகர் ஆகியார் அங்கம் வகித்தனர்.
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right