ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய மகா கும்பாபிஷேகம்

2023-06-06 11:15:59
பல நூற்றாண்டுகள் தொன்மை வாய்ந்த வரலாற்று சிறப்பு மிக்க முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் நவதள இராஜகோபுர பணிகள் மற்றும் ஆலய புணரமைப்பு பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு ஆலயத்துக்கும் நவதள இராஜகோபுத்துக்கும் மகா கும்பாபிஷேகம் சிறப்புற நடைபெற்றுள்ளது.
கடந்த 26.05.23 அன்று கிரியைகள் ஆரம்பமாகி சிவாச்சாரியார்களால் விசேட யாகபூஜைகள் நடத்தப்பட்டு 29, 30, 31 ஆம் திகதிகளில் எண்ணெய்காப்பு சாத்தும் நிகழ்வு இடம்பெற்றது. மூன்று நாட்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து எண்ணைக்காப்பு சாத்தினர். இதனை தொடர்ந்து 01.06.2023 அன்று ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் சுயம்பு லிங்கத்திற்கும் ஏனைய பரிவார மூர்த்திகளுக்கும் புதிதாக நிர்மானிக்கப்பட்ட நவதள ராஜகோபுரத்திற்கும் 11.10 மணிதொடக்கம் 12.00 மணிவரையுள்ள சிம்ம லக்கன சுபநேரத்தில் சிவாச்சாரியார்களின் மந்திர பாராயணங்களுடன் மகா கும்பாபிஷேக பெருவிழா சிறப்பாக நடைபெற்றுள்ளது.
பல்வேறு இடங்களில் இருந்து பக்த்தர்கள் வருகைதந்து கும்பாபிஷேக பெருவிழாவினை கண்டு எம்பெருமானின் ஆசியினையும் பெற்றுச் சென்றுனர்.
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right