86ஆவது அகவை நிறைவில் தமிழ்பேசும் மக்களின் முதன்மைக் குரல் ‘வீரகேசரி’

Published on 2016-08-07 14:23:57

தமிழ் பாரம்பரியத்தின் கீழான இலங்கையின் நீண்ட வரலாற்றைக் கொண்ட ஒரே தமிழ் தேசிய பத்திரிகையான வீரகேசரி தனது 86ஆவது அகவை நிறைவை நேற்று கிராண்ட்பாஸ் தலைமை அலுவலகம் மற்றும் ஏக்கலையில் அமைக்கப்பட்டுள்ள புதிய அலுவலகத்தில் கொண்டாடியது.