கொழும்பு இராமநாதன் இந்து மகளிர் கல்லூரியில் புலமைப்பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வு

2023-05-24 17:22:41
கொழும்பு இராமநாதன் இந்து மகளிர் கல்லூரியின் பழைய மாணவியர் சங்கத்தின் ஏற்பாட்டில் ஆண்டு ஐந்து புலமை பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கான விருது வழங்கும் வைபவம் கல்லூரியின் மண்டபத்தில் அதிபர் திருமதி வை.சிவபாலன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக டாக்டர் தியாகராஜா இறைவன் அழைக்கப்பட்டிருந்ததோடு , கௌரவ விருந்தினராக இசையமைப்பாளர் ஸ்ரீ பிருந்தன் சண்முகராகவன் கலந்து கொண்டார்.
கலா சூடாமணி சண்முக ராகவன் மற்றும் திருமதி தர்மக்குலராணி சண்முகராகவன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டு இருந்தனர்.
இந்நிகழ்வில் இசைப்புலவர் சண்முகரத்தினம் நினைவாக மாணவியர்களுக்கு ஞாபகார்த்த விருதுகள் மற்றும் பரிசில்கள் என்பவை வழங்கப்பட்டன. மாணவியரின் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.
இந்நிகழ்வுக்கான அனுசரணையை ஜெர்மனியில் இருந்து இசைப் புலவரின் பேரன் அனந்தன் சிவராஜா வழங்கி இருந்தார்.
பழைய மாணவியர் சங்கத் தலைவி கௌரி ஸ்ரீ பிருந்தன் செயலாளர் சரண்யா சுரேஷ் ஆகியோரின் தலைமையில். பழைய மாணவியர் சங்க உறுப்பினர்கள் அனைவரும் இணைந்து இந்த நிகழ்வினை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.


(படபிடிப்பு- ஜே.சுஜீவகுமார்)
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right