பிரித்தானிய தூதுவர் யாழ். பல்கலைக்கு விஜயம்!

2023-05-23 15:24:10
இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் சரா ஹூல்ரன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு சம்பிரதாய பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டார்.
யாழ்ப்பாணத்துக்கு உத்தியோகப+ர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள பிரித்தானிய தூதுவர் சரா ஹூல்ரன், இந்தியா மற்றும் இந்து சமுத்திரப் பிராந்தியத்துக்கான இயக்குநர் பென் மெலோர் ஆகியோர் இன்று காலை 11 மணியளவில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு விஜயம் செய்தனர். இந்தச் சந்திப்பின் போது யாழ். பல்கலைக்கழகத்தின் சார்பில் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா, பதிவாளர் வி. காண்டீபன் ஆகியோரைச் சந்தித்துக் கலந்துரையாடினர்.
சமகால விவகாரங்கள், பிரித்தானியாவுக்கும், யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்துக்கும் இடையிலான கல்வி சார் உடன்படிக்கைகள் பற்றிக் கேட்டறிந்த பிரித்தானியத் தூதுவர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இலவச மதிய உணவு வழங்கப்படும் சமுதாயச் சமையலறைக்கும் சென்று பார்வையிட்டார்.
image
image
image
image
image
image
image
image
image
image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right