பாக்குத்தெண்டலுடன் ஆரம்பமானது வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவம்

2023-05-23 09:27:22
வரலாற்றுச் சிறப்புமிக்க முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவத்தின் ஆரம்ப உட்சவமான பாக்கு தெண்டல் உற்சவம் இன்று (22) அதிகாலை சிறப்பாக இடம்பெற்றது.
இன்று(22) அதிகாலை 1.45 மணியளவில் முள்ளியவளை காட்டாவிநாயகர் ஆலயத்தில் மடை பரவி வழிபாடுகள் இடம்பெற்றதனைத் தொடர்ந்து ஆலயத்துடன் பாரம்பரியமாக தொடர்புடைய குடும்பங்களிடம் சென்று இந்த பாக்கு தெண்டல் உற்சவம் இடம்பெற்றது.
பாக்கு தெண்டலுக்கு சென்றவர்கள் ஆலயத்தை வந்ததும் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றதையடுத்து இன்றைய உற்சவம் நிறைவு பெற்றுள்ளது.
பாரம்பரிய தெய்வமாகிய வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் உற்சவத்தை அறிவிக்கும் முகமாக ஆலயத்துடன் பாரம்பரியமாக தொடர்புகளை கொண்ட குடும்பங்களின் வீடுகளுக்கு சென்று தெரிவிக்கும் சம்பிரதாய உட்சவமாக இது இடம்பெறுகிறது
பொங்கல் வருகைதர இருக்கின்றது என்பதை அறிவித்து இடம்பெறும் இவ் உட்சவத்தை அடுத்து 7 ஆம் நாள் முல்லைத்தீவு பெருங்கடலில் தீர்த்தம் எடுத்து வந்து உப்பு நீரிலே விளக்கேற்றி பொங்கல் உட்சவம் இடம்பெறும். இதன் போது மக்கள் தேவையான பொருட்களை கொண்டு வந்து பொங்கல் செய்வார்கள். இதற்கான அறிவித்தலாகவே இந்த பாக்கு தெண்டல் உற்சவம் இடம்பெற்றதாக ஆலய வரலாறு தெரிவிக்கின்றது.
இச் சம்பிரதாயத்திற்கு அமையவே தற்போதும் பாக்கு தெண்டல் உற்சவம் இடம்பெறுகின்றது
வரலாற்றுச் சிறப்புமிக்க முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவத்தின் தீத்தம் எடுக்கும் உட்சவம் 29.05.2023 அன்று இடம்பெறவுள்ளதோடு காட்டாவிநாயகர் ஆலய பொங்கல் 04.06.2023 அன்றும் வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் 05.06.2023 அன்றும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right