இலங்கை அஹ்மதியா முஸ்லிம் ஜமாத்தின் பெண்கள் அமைப்பினரின் கண்காட்சி

2023-05-20 10:55:50
இலங்கை அஹ்மதியா முஸ்லிம் ஜமாத்தின் பெண்கள் அணியினர் (லெஜ்னா இமாஹில்லா) இன்று (20) நீர்கொழும்பு அஹ்மதியா முஸ்லிம் பள்ளிவாசலில் இஸ்லாமிய கண்காட்சி ஒன்றை நடத்துகின்றனர்.
பெண்கள் பிரிவு ஆரம்பிக்கப்பட்டு நூறு ஆண்டுகள் நிறைவடைவதையிட்டு இந்த கண்காட்சி நடத்தப்படுகிறது. கண்காட்சியில் சிறுமிகள் மட்டும் யுவதிகளால் தயாரிக்கப்பட்ட கைவினை பொருட்கள் மற்றும் சமயம் தொடர்பான விளக்கங்கள் இந்த கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன.
கொழும்பு , நீர்கொழும்பு பஸ்யாலை, புத்தளம், பொலனாருவை உட்பட நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் இருந்தும் அஹ்மதியா முஸ்லிம் பெண்கள் இந்த கண்காட்சியில் தமது பங்களிப்பை வழங்கி உள்ளனர்.
பெண்கள் அமைப்பினால் வெளியிடப்பட்ட 'அல் நிஷா' சஞ்சிகையின் பிரதியை அஹமதியா முஸ்லிம் ஜமாத்தின் தேசிய தலைவர் நிஸாம்கான் அவர்களிடம் பெண்கள் அமைப்பின் தலைவி ஸானாஸ் ரிஷாக் கையளித்தார்.
அதிக எண்ணிக்கையான ஆண்களும் இந்த கண்காட்சிக்கு வருகை தந்திருந்ததை அவதானிக்க முடிந்தது.
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right