மன்னார் தள்ளாடி 54 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் மாபெரும் சிரமதானம்

2023-05-20 10:44:07
மன்னார் தள்ளாடி 54 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் மன்னார் பிரதான பாலத்தடி இல் இருந்து மடு சந்தி வரையும் மாபெரும் சிரமதானம் கடந்த(18) வியாழக்கிழமை முன்னெடுக்கப்பட்டது.
தள்ளாடி இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் நலிந்த நியாங்கொட தலைமையில் இடம்பெற்ற குறித்த சிரமதானப் பணியின் போது ராணுவ வீரர்கள், கடற்படை மற்றும் பொது மக்களும் இணைந்து கொண்டு பூரண ஒத்துழைப்பை வழங்கி உள்ளனர்.
இதன் போது வீதி ஓரங்களில் காணப்பட்ட கழிவு பொருட்கள், உக்காத பிளாஸ்டிக் பொருட்கள் ஆகியவற்றை அகற்றி சேகரித்தனர். மேலும், குறித்த பகுதிகளில் அடையாளம் காணப்பட்ட இடங்களில் 'குப்பை போடாதீர்கள்' என்ற விழிப்புணர்வு பலகையும் நிறுவப்பட்டுள்ளது.
மன்னார் நகர சபையின் சுத்திகரிப்பு வாகனங்கள் ஊடாக சேகரிக்கப்பட்ட கழிவுப் பொருட்கள் அகற்றிச் செல்லப்பட்டது.
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right