கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் டெங்கு ஒழிப்பு

2023-05-19 12:39:06
கிளிநொச்சி மாவட்டத்தில் டெங்கு பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை மற்றும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் ஒழுங்குபடுத்தலில் டெங்கு ஒழிப்பு செயற்றிட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அதனடிப்படையில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை பணிப்பாளரின் ஏற்பாட்டில் குறித்த வைத்தியசாலை பகுதிகளை டெங்கு அற்ற சூழலாக மாற்றுவதற்கான சிரமதான வேலைத் திட்டம் இன்று(19-05-2023) வெள்ளிக்கிழமை காலை 7.00 மணிக்கு முன்னெடுக்கப்பட்டது.
கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை, பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை, மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு, கிளிநொச்சி மாவட்ட செயலகம், சிவில் பாதுகாப்பு திணைக்களம், கரைச்சி பிரதேச சபையினர், சர்வோதயம், இலங்கை செஞ்சிலுவைச் சங்க கிளிநொச்சி மாவட்ட கிளையினர், பொலிஸ் திணைக்களம், இளைஞர் கழகம், சமூக மட்ட அமைப்புகள், சமூக தொண்டர் அமைப்புகள், கிளிநொச்சி மகாவித்தியாலய பழைய மாணவர்கள், Rotaract Club, AMC, RARC என பல்வேறு தரப்பினரும் இணைந்து சிரமதான முறையில் இந்த வேலைத்திட்டத்தினை முன்னெடுத்தனர்.
இதன்போது டெங்கு நுளம்புகள் பெருகக் கூடிய இடங்களான குப்பைகள், வெற்றுப் போத்தல்கள்,நீர் தேங்கக் கூடிய இடங்கள் இடங்கள் சிரமதானம் மூலம் துப்புரவு செய்யப்பட்டு பெருமளவான திண்மக் கழிவுகள் தரம் பிரிக்கப்பட்டு கரைச்சி பிரதேச சபையினரின் உதவியுடன் அப்புறப்படுத்தப்பட்டன.
குறித்த டெங்குக் கட்டுப்பாட்டுச் சிரமதானத்திற்காக 40 விளக்குமாறுகளை Mental Health Society யும் 10 குப்பைவாரிகளை கிளிநொச்சி வர்த்தகர் சங்கமும்
Huru Hardware 10 புல்வெட்டும் பட்டங்களை அன்பளிப்பாக வழங்கியுள்ளதுடன், கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலை நோயாளர் நலன்புரிச் சங்கம் சிற்றுண்டி மற்றும் உபசாரங்களை வழங்கி உதவியிருந்தது.
மேலும் கிளிநொச்சி மாவட்டத்தில் வீடுகள் மற்றும் பொது இடங்களில் டெங்கு நுளம்பு பரவக்கூடிய சூழல்களை அடையாளப்படுத்தல் மற்றும் அவற்றை அப்புறப்படுத்துதல் என்ற நோக்கில் சுகாதார வைத்திய அதிகாரிகள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், டெங்கு ஒழிப்பு செயலணி உத்தியோகத்தர்கள், பாதுகாப்பு துறையினர் விசேட செயற்பாடுகளை பிரதேச செயலர் ரீதியாக தொடர்ந்தும் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right