கல்முனை பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் பொது மக்கள் நடமாடும் சேவை

2023-05-17 14:36:34
கல்முனை பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பொது மக்கள் நடமாடும் சேவை இன்று(17) புதன்கிழமை பிரதேச செயலக வளாகத்தில் பிரதேச செயலாளர் ஜே.லியாக்கத் அலி தலைமையில் இடம்பெற்றது.
இந்நடமாடும் சேவையில் காணி, சமூக சேவைகள், சமூர்த்தி, மோட்டார் போக்குவரத்து, திட்டமிடல், கலாசாரம், மகளிர் அபிவிருத்தி, தேசிய அடையாள அட்டை, பொலிஸ், தேசிய வீடமைப்பு அதிகார சபை, பதிவாளர் திணக்களம் ஆகிய பிரிவுகள் கலந்து கொண்டு பொது மக்களின் பிரச்சினைகளுக்கு உடனடித்தீர்வுகள் வழங்கிவைக்கப்பட்டன.
அத்துடன் முதியோர் அட்டைகளும் சிலருக்கு வழங்கி வைக்கப்பட்டதுடன் அங்கவீனமுற்ற நபர் ஒருவருக்கு சக்கர நாட்காலியும், இயலாமை நிலையிலுள்ள முதியோர்களுக்கு ஊன்றுகோலும் மற்றும் மருதமுனை வீட்டுத்திட்டத்தில் எஞ்சியுள்ள வீடுகளை வழங்குவதற்கான நேர்மூகப் பரீட்சை என்பன நடைபெற்றது. இதில் கல்முனை பிரதேசத்திலுள்ள பொது மக்கள் பலரும் கலந்து கொண்டு தங்களது தீர்க்கப்படாத நீண்ட கால பிரச்சினைகளை முன் வைத்து தீர்வுகளைப் பெற்றுக்கொண்டனர்.
இந்நிகழ்வில் கல்முனை பிரதேச செயலக கணக்காளர் யூ.எல் ஜவாஹிர், உதவி திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஜெளபர், கல்முனை, பெரியநீலாவணை பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரிகள், சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் ஏ.ஆர்.எம்.சாலீஹ் நிருவாக கிராம உத்தியோகத்தர் எம்.எச் ஜனூபா பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தர்கள், உட்பட கிராம உத்தியோகத்தர்கள் சமுர்த்தி மற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right