கொழும்பு - கொட்டாஞ்சேனை புனித பெனடிக் கல்லூரி ஸ்தாபகர் தினத்தை முன்னிட்டு கல்லூரியில் டி லா சால் சபையை சேர்ந்த கட்டட வடிவமைப்பாளரும் கட்டக் கலைஞருமான அருட்சகோதரர் கஷியன் அவர்களால் 1900 இல் நிர்மாணிக்கப்பட்ட கல்லூரியின் அதி பழைய மணிக்கூட்டு கோபுரத்துடன் கூடிய கட்டடத்தை , பாடசாலையின் பழைய மாணவர்களின் ஏற்பாட்டில் திரு.றொஹான் டி சில்வாவின் பூரண பங்களிப்புடன் முற்றாக புனரமைத்து , திறந்து வைக்கும் வைபவம் வியாழக்கிழமை (11) பாடசாலை அதிபர் அருட் சகோதரர் புபுது ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்றது.
பிரதம விருந்தினராக கலந்து கொண்ட டி லா சால் சபையின் ஆசிய பசுபிக் பிராந்திய தலைவரும் கத்தோலிக்க பாடசாலைகளின் சிரேஷ்ட பொறுப்பாளருமான அதிவணக்கத்துக்குரிய சகோதரர் ஆர்மின்.ஏ.லூசியுறோ மற்றும் டி லாசால் சபையை சேர்ந்த சகோதரர்கள் , அருட்பணியாளர்கள் பாடசாலை மாணவர்களால் மாலை அணிவித்து அழைத்து வரப்படுவதையும் புனரமைக்கப்பட்ட மணிக்கூட்டு கோபுரத்துடன் கூடிய கட்டடத்தை பிரதம விருந்தினர் , பாடசாலை அதிபர் , புனரமைப்புக்கு பொறுப்பான றொஹான் டி சில்வா ஆகியோர் திறந்து வைப்பதையும் , பாடசாலையின் 2022 ஆம் ஆண்டுக்கான அதி சிறந்த ஆசிரியர்க்கான பேராசிரியர் நிஹால் அமரசிங்க விருதை பிரதம அதிதியால் ஆசிரியர் டைட்டஸ் விதானகேவுக்கு வழங்கப்பட்டது.
(படப்பிடிப்பு : ஜோய் ஜெயக்குமார்)
- முகப்பு
- Photo Galleries
- கொட்டாஞ்சேனை புனித பெனடிக் கல்லூரியின் புனரமைக்கப்பட்ட மணிக்கூட்டுக்கோபுர கட்டிடத் திறப்பு
கொட்டாஞ்சேனை புனித பெனடிக் கல்லூரியின் புனரமைக்கப்பட்ட மணிக்கூட்டுக்கோபுர கட்டிடத் திறப்பு
2023-05-12 10:55:46
-
சிறப்புக் கட்டுரை
ஜனாதிபதி செயலாளரை சந்தித்த அமெரிக்க இராஜதந்திரிகள்
27 May, 2023 | 10:30 PM
-
சிறப்புக் கட்டுரை
சிறுவர்கள் கடத்தல் : பின்னணியில் நடப்பது...
26 May, 2023 | 04:41 PM
-
சிறப்புக் கட்டுரை
அறகலய மீதான அவதூறுகள்
26 May, 2023 | 12:00 PM
-
சிறப்புக் கட்டுரை
கொரோனாவை விட கொடூர தொற்று வரப்போகிறது!...
25 May, 2023 | 02:51 PM
-
சிறப்புக் கட்டுரை
குறைவடையப் போகும் வட்டி வீதங்கள் ?
24 May, 2023 | 04:43 PM
-
சிறப்புக் கட்டுரை
ராஜபக்ஷர்களின் இலக்கு : பிரதமர் பதவியா?...
23 May, 2023 | 09:42 PM
மேலும் வாசிக்க