ஊடகவியலாளர்களின் நலன் கருதி உதவிகள் வழங்கி வைப்பு

2023-05-11 15:06:51
ஊடகவியலாளர்களின் பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நீதிக்கான மய்யத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன் முதற்கட்டமாக தெரிவு செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதிக்கான மய்யத்தின் சாய்ந்தமருது காரியாலயத்தில் புதன்கிழமை(11) மாலை இடம்பெற்றது.
சிலோன் மீடியா போரத்தின் தலைவர் கலாநிதி றியாத் ஏ.மஜீத் விடுத்த வேண்டுகோளை ஏற்று நீதிக்கான மய்யத்தினால் இந்த கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும் மேற்படி நிகழ்வானது நீதிக்கான மய்யத்தின் தலைவர் சட்டத்தரணி ஷஃபி எச்.இஸ்மாயில் தலைமையில் இடம்பெற்றதுடன் நீதிக்கான மய்யத்தின் பிரதித் தலைவர் யூ.கே.எம்.றிம்சான், பொருளாளர் ஏ.ஏ.அஷ்ரஃப் அலி, சட்டத்தரணி எம்.ஷிபான், சிலோன் மீடியா போரத்தின் தலைவர் கலாநிதி றியாத் ஏ.மஜீத், பொதுச் செயலாளர் ஏ.எல்.எம்.முஜாஹித், பொருளாளர் நூருல் ஹுதா உமர், பிரதித் தலைவர் எஸ்.அஷ்ரஃப்கான், பிரதிச் செயலாளர் எம்.எம்.ஜபீர், செயற்குழு உறுப்பினர்களான எம்.வை. அமீர், எஸ்.ஜனூஸ் உள்ளிட்ட ஊடகவியலாளர்களான அஸ்லம் எஸ்.மெளலானா, பாறூக் ஷிஹான் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இது தவிர நீதிக்கான மய்யத்தினால் கடந்த காலங்களில் தெரிவு செய்யப்பட்ட தமிழ், முஸ்லிம் பாடசாலை மாணவர்களுக்கு ‘மகிழும் இதயம்’ திட்டத்தினூடாக கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right