மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்தில் நடைபெற்ற திருக்குறள் விழா!

2023-05-11 09:40:30
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்தில் திருக்குறள் விழா கடந்த 09ஆம் திகதி காலை 10.00 மணிக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றிருந்தது.
மாந்தை கிழக்கு பிரதேசத்திற்குட்பட்ட நலன்விரும்பிகளின் அனுசரணையுடன் பிரதேச செயலாளர் ந.ரஞ்சனா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் விருந்தினர்கள் அழைத்துவரப்பட்டமையை தொடர்ந்து பிரதம விருந்தினராக கலந்து கொண்டிருந்த மாவட்ட செயலாளர் க.விமலநாதன் திருவள்ளுவர் சிலைக்கு மலர்மாலையினை அணிவித்து விழாவை ஆரம்பித்து வைத்தார்.
மேலும் சமநேரத்தில் திருவள்ளுவர் தோற்றத்துடன் நிகழ்விற்கு வருகை தந்திருந்த பள்ளி சிறுவன் பல்லக்கில் தூக்கி வரப்பட்டு நிகழ்வு நடைபெற்ற மாநாட்டு மண்டபத்திற்கு விருந்தினர்களுடன் அழைத்து வரப்பட்டனர்.
தொடர்ந்து குறள்வாழ்த்து இசைக்கப்பட்டதனைத்தொடர்ந்து மங்கள விளக்கினை பிரதம விருந்தினராகக் கலந்து சிறப்பித்த முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் க.விமலநாதன், சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து சிறப்பித்த மேலதிக மாவட்ட செயலாளர் க.கனகேஸ்வரன் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட திட்டமிடல்ப் பணிப்பாளர் திருமதி.ம.கிரேசியன் வில்வராஜா, கௌரவ விருந்தினர்களாகக் கலந்து சிறப்பித்த பொறியியலாளர் வவுனிக்குளம் கை.பிரகாஸ் மற்றும் மு/பாலிநகர் மகாவித்தியாலய அதிபர் ஶ்ரீகமலநாதன் ஏற்றிவைத்ததைத் தொடர்ந்து ஏனைய அதிதிகளும் மங்கள விளக்கினை ஏற்றி வைத்தனர்.
தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்து இடம்பெற்றதைத் தொடர்ந்து ஆரணி நர்த்தனாலய மாணவர்களின் வரவேற்பு நடனமும்,மாணவர்கள் மற்றும் அலுவலக உத்தியோகத்தர்களின் கலை நிகழ்வுகளும் சிறப்பாக இடம்பெற்றன.
தொடர்ந்து மாணவர்களுக்கான சான்றிதழ்களும் பரிசில்களும் அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பிரதேச செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், உத்தியோகத்தர்கள், மாணவர்கள், பொதுமக்கள், சமூக மட்ட அமைப்பினர் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right