யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் திரிசாரணர்களுக்கான சின்னம் சூட்டல் நிகழ்வு

2023-03-28 10:58:17
யாழ் இந்து திரிசாரணர் குழுவின் 6 சாரணர்களுக்கான திரிசாரணர் சத்தியப் பிரமாண நிகழ்வுடன் கூடிய சின்னம் தரித்தல் நிகழ்வு 26.03.2023 ஞாயிற்றுக்கிழமை அன்று யாழ். இந்துக் கல்லூரி பிரார்த்தனை மண்டபத்தில் இடம்பெற்றது.
திரிசாரணர் குழுவானது பாடசாலைக் கல்வியினை பூர்த்தி செய்தவர்களுக்கான சாரணர் சேவையினை 26 வயது வரை தொடர்வதற்கான கட்டமைப்பாகும்.
நிகழ்வில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் பழைய மாணவர்களான வைத்தீஸ்வரன், கோகுலரமணன், சிவசங்கர், நிமல், டினுசாந்தன், கோபிராம் ஆகிய சாரணர்கள் திரிசாரணர்களாக உறுதியேற்பு எடுத்துக்கொண்டனர்.
யாழ். மாவட்ட முன்னைநாள் சாரண ஆணையாளர் செ.தேவரஞ்சன், யாழ். மாவட்ட சாரண உதவி மாவட்ட ஆணையாளர்களான கோ.சத்தியன் மற்றும் துற்ஜெயந்தன், சாரணர் தலமைசெயலக உதவி ஆணையாளர் அமல்ராஜ், யாழ். இந்துக் கல்லூரி சாரண ஆசிரியர் நிதர்சன், யாழ். இந்து திரிசாரண ஆசிரியர் சுஜீவன் ஆகியோர் நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.
யாழ் இந்து திரிசாரணர் குழுவானது 2016ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பழைய சாரணர்களுக்கான திரிசாரணர் குழுவாக ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right