தியோகுநகர் சர்வேஸ்வரர் ஆலய கும்பாபிஷேகம்

2023-03-24 15:58:41
முல்லைத்தீவு - சிலாவத்தை தெற்கு, தியோகு நகர் பகுதியில் அமைந்துள்ள சர்வேஸ்வரர் ஆலயத்தின், அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக பெரும்சாந்தி விழா இன்று (24.03.2023) சிறப்புற இடம்பெற்றது.
'ஆகம கலாநிதி' பிரம்ம ஸ்ரீ கணபதீஸ்வர ராமக்குருக்கள் தலைமையில் இந்த கும்பாபிசேக விசேட பூசை வழிபாடுகள் இடம்பெற்றன.
அந்தவகையில் காலை 07.00மணிக்கு புண்யாகவாசனம், யாகபூசை, ஹோமம், மகா பூர்ணாகுதி, அந்தர் பலி, பகிர்பலி, யாகதீபாராதனை, என்பன இடம்பெற்றன.
அதனைத்தொடர்ந்து 9.30 மணிக்கு ஸ்தூல லிங்கதூபி அபிஷேகம் நடைபெற்று, 10.30இற்கு மூலாலியத்தில் மஹா கும்பாபிசேகம் குடமுழுக்குப் பெருவிழா இடம்பெற்றது.
தொடர்ந்து சமர்ப்பணங்கள், தசமங்களதரிசனம், எஜமான் அபிசேகம் என்பனவும் இடம்பெற்றன.
இந்த கும்பாபிசேக விசேட பூசை வழிபாடுகளில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும், பெருந்திரளான அடியவர்களும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right