வவுனியாவில் காசநோய் விழிப்புணர்வு பேரணி

2023-03-24 15:33:23
வவுனியாவில் காச நோய் தொடர்பாக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் விழிப்புணர்வு பேரணி ஒன்று இடம்பெற்றுள்ளது.
உலக காச நோய் தினமான இன்று (24) வவுனியா மாவட்ட வைத்தியசாலை காசநோய் கட்டுப்பாட்டுப் பிரிவின் ஏற்பாட்டில் குறித்த விழிப்புணர்வு பேரணி இடம்பெற்றிருந்தது.
இதன்போது காச நோய் தொடர்பான கருத்தரங்கு ஒன்று காலை 9.30 மணிக்கு காச நோய் கட்டுப்பாட்டுப் பிரிவு அலுவலகத்தில் இடம்பெற்றிருந்தது. அதனைத் தொடர்ந்து, 'ஆம்! எங்களால் காசநோயினை முடிவுக்கு கொண்டு வர முடியும்' எனும் தொனிப்பொருளில் மக்களிற்கு விழிப்புணர்வினை ஏற்படுத்தும் முகமாக பேரணி இடம்பெற்றிருந்தது.
இப்பேரணியானது காச நோய் கட்டுப்பாட்டுப் பிரிவிலிருந்து புதிய பேரூந்து நிலையம் ஊடாக சென்று, ஏ9 வீதியூடாக ஹொரவப்பொத்தானை வீதியினை அடைந்து, பசார் வீதியூடாக வவுனியா மணிக்கூட்டுக் கோபுர சந்தியை அடைந்து, பழைய பேரூந்து நிலையம் சென்று அங்கிருந்து மீண்டும் வைத்தியசாலையினை அடைந்திருந்தது.
இப்பேரணியில் காச நோய் தொடர்பான பதாதைகளை ஏந்திய வண்ணம் குறித்த பிரிவிற்கான வைத்தியர்கள், தாதியர், கல்லூரி மாணவர்கள், சுகாதார பிரிவினர், பொலிஸார் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இதன்போது, காசநோய் விழிப்புணர்வு துண்டுபிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன.
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right