ஓட்டமாவடியில் முப்பெரும் விழா

2023-03-22 14:10:52
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ஓட்டமாவடி பிரதேச செயலகமும் மகளிர் அபிவிருத்தி திணைக்களமும் இணைந்து நடாத்திய மகளிர் தின நிகழ்வும் முக்காடு சஞ்சிகை வெளியீடு மற்றும் பெண் தொழில் முயற்சியாளர்களின் உற்பத்திப் பொருட்களின் கண்காட்சியும் பிரதேச செயலகத்தில் இடம் பெற்றது.
பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் எஸ்.எம்.அல் அமீன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம அதிதிகளாக ஓட்டமாவடி பிரதேச செயலாளர் வி.தவராஜா, ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.எம்.தாரிக் ஆகியோர் கலந்து கொண்டதுடன் அதிதிகளாக பிரதேச செயலக பிரதித்திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.ஏ.றியாஸ், கணக்காளர் எம்.ஐ.எஸ். சஜாத் அகமட், நிருவாக உத்தியோகத்தர் எஸ். அப்துல் ஹமீட் இஸ்லாமிக் ரிலீப் நிறுவன திட்ட முகாமையாளர் எம்.எம் இப்னு யாசீர், நியூ அரோ நிறுவன பணிப்பாளர் திருமதி ஆர்.ருத்ராதேவி மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி பாத்திமா பர்ஸானா நஜீர், மகளிர் சங்க உறுப்பினர்கள உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
மகளிர் தினத்தை முன்னிட்டு முக்காடு சஞ்சிகை 02 வெளியிட்டு வைக்கப்பட்டதுடன் மகளிர் தினத்தை முன்னிட்டு பாடசாலை மட்டத்தில் நடாத்தப்பட்ட போட்டி நிகழ்ச்சிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டதுடன் பெண் தொழில் முயற்சியாளர்கள் உற்பத்தி பொருட்களின் கண் காட்சியியும் விற்பனையும் இடம் பெற்றது.
இதன்போது நலிவுற்ற குடும்பங்களுக்கான உலர் உணவு பொதிகள் வழங்கப்பட்டதுடன் பெண் தொழில் முயற்சியாளர்களுக்கான வட்டியில்லா கடன் வசதியும் வழங்கி வைக்கப்பட்டது.
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right