அபிநயஷேத்ரா நடனப்பள்ளியின் ஏற்பாட்டில் கடந்த 13ஆம் திகதி திங்கட்கிழமை சரஸ்வதி மண்டபத்தில் பரதநாட்டியப் பயிற்சிப் பட்டறை இடம்பெற்றது.
இந்தியாவில் முன்னணி ஆற்றுகைக் கலைஞராக சங்கீத வித்வத்சபையின் சிறந்த ஆண் நடனக் கலைஞர் விருது பெற்ற , கனடாவைப் பிறப்பிடமாக கொண்ட இலங்கைக் கலைஞர் திரு பவஜன் குமார் இப்பயிற்சிப் பட்டறையை நடத்தினார்.
இலங்கையின் ஆற்றுகைக் கலைஞர்களும் அபிநயஷேத்ரா மாணவர்களும் இதில் பங்கேற்றனர். இவர்கள் இலங்கை இந்தியக் கலை உறவிற்குப் பெரும் பாலமாக செயற்படும் அபிநயஷேத்ராவிற்கு நன்றிகளைத் தெரிவித்தனர்.
இயக்குநர் திவ்யா சுஜேன் தலைமை உரையாற்றுகையில் இவ்வாறான சிறந்த பல குருமாரிடம் கற்ற ஆற்றுகைக் கலைஞர்களின் அனுபவப் பகிர்வினைப் பெறுவது மிகவும் பயனுள்ளதென்றும், கலைஞர்களாக எல்லோரும் ஒன்றுபட்டு கலையறிவைப் பகிர்ந்து இன்புற வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
இலங்கையிலும் நடனக் கச்சேரிகள் மீண்டும் இடம்பெற வேண்டும் என்ற உயர் எண்ணத்தில் ‘கச்சேரி மேளா’ நிகழ்ச்சித் திட்டத்தை அபிநயஷேத்ரா வழங்கி வருகிறது. ஆர்வமுள்ளோர் விண்ணப்பித்து சிறந்த கலை அனுபவத்தை பகிருங்கள் என்றும் தெரிவித்தார். (படங்கள்: எஸ். எம். சுரேந்திரன்)
- முகப்பு
- Photo Galleries
- அபிநயஷேத்ரா நடனப்பள்ளியின் பரதநாட்டியப் பயிற்சிப் பட்டறை
அபிநயஷேத்ரா நடனப்பள்ளியின் பரதநாட்டியப் பயிற்சிப் பட்டறை
2023-03-15 12:09:10





























































-
சிறப்புக் கட்டுரை
சர்வதேச நாணய நிதிய கடன் தீர்வல்ல
28 Mar, 2023 | 11:31 AM
-
சிறப்புக் கட்டுரை
இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் வலுக்கும்...
25 Mar, 2023 | 02:01 PM
-
சிறப்புக் கட்டுரை
ஸ்பெயினின் "பொடிமாஸும்"- இலங்கையின் "அரகலயவும்"
25 Mar, 2023 | 10:10 AM
-
சிறப்புக் கட்டுரை
கடனைக் கண்டு களிப்பு!
25 Mar, 2023 | 10:27 AM
-
சிறப்புக் கட்டுரை
இறுதி பகுதி ; கற்கால யாழ்ப்பாணப்...
24 Mar, 2023 | 11:50 AM
-
சிறப்புக் கட்டுரை
பகுதி - 06 ; கற்கால...
24 Mar, 2023 | 09:59 AM
மேலும் வாசிக்க