பொது அமைப்புகளில் பெண்களின் பங்களிப்பை அதிகரித்தல் தொடர்பான விழிப்புணர்வு

2023-03-14 16:36:28
பொது அமைப்புகளில் பெண்களின் பங்களிப்பை அதிகரிப்பதன் ஊடாக பெண்களை வலுப்படுத்தலும் அதன் மூலமாக அபிவிருத்தியும் எனும் தொனிபொருளில் சமூகமட்ட பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் பொதுமக்களுக்கான விழிப்புணர்வு வேலை திட்டம் ஒன்று இன்று(14) பாண்டியன்குளம் பொது நோக்கு மண்டபத்தில் இடம்பெற்றது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி உதவியில் கிறிசலிஸ் நிறுவனம் முன்னெடுத்த சமூகத்தை கட்டி எழுப்புதல் மற்றும் பெண் தலைமைத்துவத்தை மேம்படுத்தல் ரான்ஸ்போம் திட்டத்தில் நூறு ஆண்கள் மற்றும் 300 பெண்கள் உள்ளடங்கலான 400 பேருக்குமான வலுப்படுத்தல் திட்டம் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் இடம் பெற்று வருகின்றது.
இந்த செயதிட்டத்தில் ஈடுபட்ட பிரதிநிதிகள் மக்களுக்கான விழிப்புணர்வு வேலை திட்டங்கள் பலவற்றை திட்டங்களாக முன்னிலைப்படுத்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் இந்த திட்டத்துக்கு பரிந்துரை செய்யப்பட்டு சிறந்த முறையில் இந்த திட்டம் பரிந்துரை செயற்திட்ட குழுவினர்களால் மாவட்ட செயலாளரின் அனுமதியுடன் மாவட்டத்தில் 5 பிரதேச செயலாளர்கள் பிரிவுகளில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் மாந்தை கிழக்கு பிரதேச செயலக பிரிவுக்கான குறித்த செயல் திட்டமே இன்று மாவட்ட பரிந்துரை செயற்பாட்டு குழு தலைவி கலைச்செல்வி அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
நிகழ்வில் திட்ட இணைப்பாளர், நிறுவனத்தின் திட்ட அமைப்பாளர், கிறிசலிஸ் திட்டத்தின் வளவாளர்கள், கிராம உட்கட்டமைப்புகள், பிரதேச சபை உறுப்பினர்கள், பெண்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right