திருநர்களுக்கான சமூக சமவாய்ப்பினை உருவாக்குதல் தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கை

2023-03-14 10:44:46
திருநர்களுக்கான சமூக சமவாய்ப்பினை உருவாக்குதல் எனும் தொனிப்பொருளில் விழிப்புணர்வு நடவடிக்கை ஒன்று நேற்று (13) மாலை கரைதுறைப்பற்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியில் கிறிசலிஸ் நிறுவனம் முன்னெடுத்துவரும் ரான்ஸ்போம் திட்டத்தின் ஊடாக வலுப்படுத்தப்பட்ட பெண் தலைவர்களால் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
வலுப்படுத்தப்பட்ட பெண் தலைவர்களின் விடியலில் கீற்று என்னும் குழுவினரால் திருநர்களுக்கான சமூக சமவாய்ப்பினை உருவாக்குதல் எனும் தொனிப்பொருளில் விழிப்புணர்வு நடவடிக்கை மேற்கொள்ளும் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டு வடமாகாணத்தில் குறித்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
இவ் விழிப்புணர்வு நடவடிக்கை கரைதுறைப்பற்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் முன்னாள் கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் திருமதி உதயகுமார் றணிஸ்ரலா தலைமையில் இடம்பெற்றது
இந்த நிகழ்வில் கரைதுறைப்பற்று பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர், வைத்தியர் விதுரன், சட்டத்தரணி ருஜிக்கா நித்தியானந்தராஜா பொலிசார் திட்டத்தின் பங்குதாரர் களானவிடியல் கீற்று குழுவின் புஸ்பானந்தம் இமல்க்குலேற்றா ,ஜெகதீஸ்வரன் தமிழினி மற்றும் கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்தில் பணியாற்றும் அனைத்து உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்
குறித்த நிகழ்வில் திருநர்களினால் தாம் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பில் கருத்துக்கள் வழங்கப்பட்டதை தொடர்ந்து திருநர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right