முல்லைத்தீவு யோகபுரம் மகாவித்தியாலய வைரவிழா நிகழ்வு

2023-03-01 17:14:10
முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவி பகுதியில் அமைந்துள்ள யோகபுரம் மகா வித்தியாலயம் 1962 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு 2022 ஆம் ஆண்டு வைரவிழா கண்டுள்ளது
அந்தவகையில் பாடசாலையின் வைரவிழா நிகழ்வானது இன்று (01) காலை 9 மணிக்கு ஆரம்பமாகி இடம்பெற்று வருகிறது
யோகபுரம் மகாவித்தியாலய முதல்வர் த.பிறேமச்சந்திரன் தலைமையில் இடம்பெற்று வருகின்ற இந்த வைரவிழா நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவின் தலைவரும் முன்னாள் முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபருமான ந.வேதநாயகன் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக துணுக்காய் கல்வி வலயத்தின் வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி மாலதி முகுந்தன் அவர்களும் வடக்கு மாகாண கல்வித் திணைக்களத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் தர்மலிங்கம் முகுந்தன் உள்ளிட்டவர்களும் கல்வி திணைக்கள அதிகாரிகள் அயல் பாடசாலைகளின் அதிபர்கள் பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் நலன்விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டனர்
நிகழ்வில் பாடசாலையின் வரலாற்றை தாங்கிய வைரநதி நூல் வெளியிட்டு வைக்கப்பட்டதோடு கலை நிகழ்ச்சிகள் பலவும் இடம்பெற்று வருகிறது இந்த நிகழ்வு இன்று மாலை 6 மணி வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right