அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் 100ஆவது ஆண்டு விழா

2023-01-19 16:47:10
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் 100ஆவது ஆண்டு விழா 19 ஆம் திகதி வியாழக்கிழமை பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு பண்டபத்தில் இடம்பெற்றது.

இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலந்துகொண்டு உரையாற்றினார்.

இதையடுத்து உலமா சபையின் தலைவர் அஷ்ஷைக் ரிஸ்வி முப்தி, பொதுச் செயலாளர் அஷ்ஷைக் அர்கம் நூராமித் ஆகியோர் உரையாற்றினர்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன, அமைச்சர் விதுர விக்ரமரநாயக்க மற்றும் விசேட பேச்சாளராக கலந்துகொண்ட தென்ஆபிரிக்க உலமா சபை செயலாளர் அஷ்ஷைக் மெளலானா இப்ராஹிம் பாம் ஆகியோருக்கு நினைவுச்சின்னம் வழங்கப்பட்டது.

100 வருட பூர்த்தியை நினைவுபடுத்தும் வகையில் வெளியிடப்பட்ட தபால்தலையின் முதல் பிரதியை இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார ஜனாதிபதிக்கு கையளித்தார்.
இந்நிகழ்வில் மாணவர்களின் கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றது.

(படப்பிடிப்பு: ஜே. சுஜீவகுமார்)
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right