சிறந்த ஊடகவியலாளருக்கான விருது வழங்கல் - 2021

2022-12-14 18:37:07
இலங்கை பத்திரிகை ஸ்தாபனமும் இலங்கை பத்திரிகை ஆசிரியர் சங்கமும் இணைந்து நடத்திய 2021 ஆம் ஆண்டுக்கான சிறந்த ஊடகவியலாளர்களுக்கான விருது வழங்கும் விழாவில் வீரகேசரி வெளியீட்டு நிறுவனமான எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் சிலோன் லிமிட்டெட் 10 விருதுகளை தட்டிக்கொண்டது.


விருது வழங்கும் வைபவம் கொழும்பு கல்கிஸ்ஸ மௌண்ட்லவேனியா ஹோட்டலில் செவ்வாய்கிழமை (13.12.2022) அன்று மாலை 5.00 மணியளவில் நடைபெற்றது.

விருது வழங்கலின் போது பத்திரிகையாளர்கள் தயா லங்காபுர, ஏ.டி.ரஞ்சித்குமார, பொன்னையா மாணிக்கவாசகம், சித்ரா வீரரட்ண, பி.பி.இலங்கசிங்க ஆகியோர் ஊடகத்துறையில் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றனர்.

ஆண்டின் சிறந்த ஊடகவியலாளருக்கான மேவின் டி சில்வா விருது ( சான்றிதழ் ) மற்றும் ஆண்டின் சிறந்த வணிக பொருளாதார செய்தியாளருக்கான விருது வீரகேசரி ஊடகவியலாளர் ஆர்.ரொபட் அன்டனி பெற்றுக்கொண்டார்.


ஆண்டின் சிறந்த புலனாய்வு செய்தியாளருக்கான விருது (சான்றிதழ் ) மற்றும் நெருக்கடி சூழ்நிலையில் செய்தி சேகரித்தமைக்கான கைலாசபதி நினைவு விருதை வீரகேசரியின் ஊடகவியலாளர் ஆர். ராம் பெற்றுக்கொண்டார்.


ஆண்டின் சிறந்த விவரணக் கட்டுரைக்கான உபாலி விஜயவர்தன விருதை வீரகேசரி ஊடகவியலாளர்களான ரொபட் அன்டனி மற்றும் சிவலிங்கம் சிவகுமார் ஆகியோருக்கு கூட்டாக வழங்கப்பட்டது

ஆண்டின் சிறந்த பத்தி எழுத்தாளருக்கான விருதை விடிவெள்ளி பத்திரிகையின் ஊடகவியலாளர் ஏ.ஆர்.ஏ. பரீல் பெற்றுக்கொண்டார்.


ஆண்டின் சிறந்த பத்தி எழுத்தாளருக்கான விருது (சான்றிதழ் ) வீரகேசரியின் ஊடகவியலாளர் சிவலிங்கம் சிவக்குமாருக்கு கிடைத்தது.


ஆண்டின் சிறந்த இணையத்தளத்திற்கான விருது மெட்ரோ நியூஸ் இணையத்தளத்திற்கு கிடைத்தது.


ஆண்டின் சிறந்த இணையத்தளத்திற்கான விருது (சான்றிதழ் ) மித்திரன் இணையத்தளத்திற்கு கிடைத்தது.


இதேவேளை, ஆண்டின் சிறந்த சுகாதார பராமரிப்பு மருத்துவ அறிக்கையிடலுக்கான விருது தினக்குரல் ஊடகவியலாளர் எம்.எச்.எப். ஹுஸ்னாவுக்கு கிடைத்தது.


ஆண்டின் சிறந்த பத்திரிகை வடிவமைப்புக்கான விருது தினக்குரலுக்கு (எஸ்.பாமதி, து. ஹரிணி, ரினோஷா ராய்) வழங்கப்பட்டது


தகவலறியும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தி எழுதப்பட்ட விவரணக் கட்டுரைக்கான விருதை தினக்குரல் பத்திரிகையின் ஊடகவியலாளர் க.பிரசன்னா பெற்றுக்கொண்டார்.


படங்கள் - ஜே.சுஜீவகுமார்
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right