இலங்கை ஐக்கிய புகைப்பட சங்கத்தின் மாபெரும் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி - 2022

2022-11-22 16:18:10

இலங்கை ஐக்கிய புகைப்பட சங்கத்தின் 2 ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு முதல் தடவையாக ஏற்பாடு செய்யப்பட்ட "மாபெரும் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி - 2022." கடந்த 2022.11.20 ஞாயிற்றுக்கிழமையன்று கொழும்பு - 5 நாரஹேன்பிட்டியில் அமைந்துள்ள ஷாலிக்கா மைதானத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
ஒரு அணிக்கு எட்டு பேர் என்ற ரீதியில் இப்போட்டியில் 64 அணிகள் பங்கேற்றதோடு அணிக்கு 5 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட 'நொக் அவுட்' முறையில் போட்டி நடைபெற்றது. இதில் வெற்றிப்பெற்ற மூன்று அணிகளுக்கும் சிறப்பு பரிசில்கள் வழங்கப்பட்டதோடு , சிறந்த ஆட்ட நாயகன் மற்றும் சிறந்த தொடர் ஆட்ட நாயகனுக்கான கேடயங்களும் வழங்கப்பட்டன.
இப்போட்டியில் வெற்றி பெற்று முதலாம் பரிசுத்தொகையான 150000 ரூபாவை ATLAS Trade Centre Wattala தட்டிச் சென்றது. இரண்டாம் இடத்தைப் பிடித்த Assidua Technologies Weflfare Sport அணி 75 000 ரூபாவையும் மூன்றாம் இடத்தைப் பிடித்த TAIAN LANKA அணி 20 000 ரூபாவையும் பரிசுத்தொகையாக பெற்றுக்கொண்டன.
இந்திகழ்வின் பிரதான அனுசரணையாளரான "TAIAN LANKA STEEL COMPANY (PVT) Ltd இன் முகாமையாளர் திரு.வு. புனிதன் அவர்கள் வெற்றிக் கிண்ணத்தினை வழங்கி வைத்தார்.
இப்போட்டித் தொடருக்கான ஊடக அனுசரணையாளராக வீரகேசரியும் இணை அனுசரணையாளராக சதீஸ் ஜுவல்லரீயும் பங்களிப்பு செய்ததோடு, ஸ்டூடியோ ப்ளு ரோஸும் இந் நிகழ்விற்கு அனுசரணை வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right