கொழும்பு - 15, காக்கைதீவு முகத்துவார சங்கமத்தில் இடம்பெற்ற ஆடி அமாவாசை நிகழ்வு

2022-07-28 16:18:27

கொழும்பு - 15, காக்கைதீவு முகத்துவார சங்கமத்தில் ஆடி அமாவாசை பிதிர் கடன்களை பக்தர்கள் செலுத்துவதற்கான ஏற்பாடுகளை கொழும்பு-15 காக்கைதீவு இந்து மன்றத்தினால் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கொழும்பு இந்து ஆலயங்களில் உள்ள 20 க்கும் மேற்பட்ட இந்துக் குருமார் இக் கடமைகளை சிறப்பான முறையில் கடற்கரையில் அமர்ந்து நிறைவேற்றிக் கொடுத்தனர்.
இதன்போது, முகத்துவார சங்கமத்தில் ஒன்று கூடிய பக்தர்கள் ஆத்ம சாந்தி வேண்டி சங்கமத்தில் நீராடி பிதிர் கடமைகளை நிறைவேற்றினர்.
பக்தர்களுக்கு உதவுவதற்கு வீரேஸ்வரநாதன் தலைமையிலான கொழும்பு-15 காக்கைதீவு இந்து மன்றத்தித்தின் அங்கத்தவர்கள் கடமைகளில் ஈடுபட்டிருந்தனர்.
( படப்பிடிப்பு : - எஸ். எம். சுரேந்திரன்)
image
image
image
image
image
image
image
image
image
image
image
image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right