கொழும்பில் இடம்பெற்ற சர்வதேச யோகா தினம்

Published on 2022-06-21 11:22:11

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம் மற்றும் இந்திய கலாச்சார நிலையம் ஆகியன ஏற்பாடுசெய்த நிகழ்வு கொழும்பிலுள்ள சுதந்திர சதுர்க்கத்தில் இன்று 21 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.
இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் வினோத். கே. ஜேகப் தலைமையில் சர்வதேச யோகா தின நிகழ்வுகள் இடம்பெற்றன.
நிகழ்வில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, வலுச்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன், திகாம்பரம், செந்தில் தொண்டமான், சுமந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
படப்பிடிப்பு எஸ்.எம். சுரேந்திரன்