2022 ஆம் ஆண்டுக்கான சர்வதேச ஊடக சுதந்திர தின நிகழ்வு

Published on 2022-05-04 21:42:44


தெற்காசிய ஊடகவியலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த ஒரு பொறிமுறையை உருவாக்க வேண்டும் என்று யுனெஸ்கோ அமைப்பின் தெற்காசியாவுக்கான தொடர்பாடல் மற்றும் தகவல் ஆலோசகர் ஹிசெகீல் ட்லமினி வேண்டுகோள் விடுத்தார்.

கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் புதன்கிழமை (4) நடைபெற்ற 2022 ஆம் ஆண்டுக்கான சர்வதேச ஊடக சுதந்திர தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அத்துடன் இந்த நிகழ்வில் யுனெஸ்கோ அமைப்பின் ஆதரவுடன் சர்வதேச ஊடகவியலாளர் சம்மேளனத்தின் 2022 ஆம் ஆண்டுக்கான தெற்காசிய ஊடக சுதந்திர அறிக்கையும் வெளியிடப்பட்டது.

இதில் தெ ற்காசிய நாடுகளின் ஊடகங்கள் ஊடகவியலாளர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் என்பன விரிவான முறையில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

(படப்பிடிப்பு எஸ்.எம்.சுரேந்திரன் )