தாய்- சேய் இணைந்து நடாத்திய பரதநாட்டிய அரங்கேற்றம்

Published on 2022-02-24 12:30:34


அபிநயக்ஷேத்திரா நடனப்பள்ளி இயக்குனர் " காலசூரி " திவ்யா சுஜெனின் மாணவர்களான நித்யா லோகேஸ்வரன் கோபிநாத் , ஷ்ருதி கோபிநாத் ஆகியோரின் அரங்கேற்றம் 20/02/2022 அன்று புதிய கதிரேசன் மண்டபத்தில் நடைபெற்றது.
" போற்றித்தாய் " என்னும் கருப்பொருளில் தாய்மையை முன்னிலைப்படுத்தி ஆடல் அமைந்திருந்தது.
இந்திய இசை மேதை டாக்டர் ராஜ்குமார் பாரதி இசைத்த தயாரிப்பினை வழங்கி இருந்தார்.
தாய்- சேய் இணைந்து நடாத்திய பரதநாட்டிய அரங்கேற்றம் இலங்கையில் இதுவே முதன் முறையாக பதிவிடப்பட்டது பாராட்டுப்பெற்றது.
( படப்பிடிப்பு எஸ். எம். சுரேந்திரன்)