ஈரானிய இஸ்லாமியப் புரட்சியின் 43 ஆவது ஆண்டு நினைவுதினம்

Published on 2022-02-15 16:06:29


ஈரானிய இஸ்லாமியப் புரட்சியின் 43 ஆவது ஆண்டு நினைவுதினம் கடந்த 11 ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொழும்பிலுள்ள ஈரான் தூதுவர் இல்லத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் அமைச்சர் சரத் வீரசேகர பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
இத்தினத்தையொட்டி பல்வேறு அரசியல் பிரமுகர்கள், தூதுவர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

( படப்பிடிப்பு சலீம் )