யாழ். குருநகர் புதுமை மாதா ஆலய 400 ஆவது ஆண்டு யூபிலி கொண்டாட்டம்

Published on 2022-02-08 13:01:08


யாழ். குருநகர் புதுமை மாதா ஆலய 400 ஆவது ஆண்டு யூபிலி கொண்டாட்டம் பெப்ரவரி மாதம் 2 ஆம் திகதி யாழ். மறைமாவட்ட ஆயர் அதிவணக்கத்திற்குரிய ஜஸ்டின் ஞானப்பிரகாசம் தலைமையில் வெஸ்பர் ஆராதனைகளுடன் ஆரம்பமாகி இடம்பெற்றது.


400 ஆவது யூபிலி ஆண்டு திருப்பலியின் பின்னர் யாழ். குருநகர் புதுமை மாதா ஆலய வரலாறுகள் அடங்கிய நினைவுமலரை ஆலய பங்குத்தந்தை அருட்பணி அருளாநந்தம் ஜாவிஸ் அடிகளார் யாழ். மறைமாவட்ட ஆயர் அதிவணக்கத்திற்குரிய ஜஸ்டின் ஞானப்பிரகாசத்திடம் கையளித்தார்.


400 ஆவது யூபிலி ஆண்டு நிறைவை குறிக்கும் முகமாக அமையவுள்ள புதிய நுழைவாயிலுக்கான அடிக்கல்லை யாழ் மறைமாவட்ட ஆயர் தலைமையிலான குருக்கள் நாட்டி வைத்தனர்.


படப்பிடிப்பு - ஜோய்ஜெயக்குமார்