இலங்கையின் 100 பெண் சாதனையாளர்களுக்கு விழித்தெழு பெண்ணே சர்வதேச மகளிர் அமைப்பின் விருது

Published on 2022-01-24 15:45:47

கனடாவின் "விழித்தெழு பெண்ணே சர்வதேச மகளிர் அமைப்பின் ஏற்பாட்டில் உலகளாவிய தமிழ் பெண் சாதனையாளர்களுக்கான விருது வழங்கும் விழா கடந்த 21 ஆம் திகதி கொழும்பில் நடைபெற்றது.

கொழும்பு குளோபல் டவர்ஸ் ஹோட்டலில் இடம்பெற்ற குறித்த விழாவில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன், வட மாகாண முன்னாள் ஆளுநரும் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேன் ராகவன், எக்ஸ்பிரஸ் நியூஸ் பேப்பேர்ஸ் சிலோன் லிமிட்டட் நிறுவனத்தின் பிரதம செயற்பாட்டு அதிகாரி செந்தில்நாதன் மற்றும் கெப்பிடல் மஹாராஜா நிறுவனத்தின் குழுமப் பணிப்பாளர் நிமல் குக் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

‘விழித்தெழு பெண்ணே’ அமைப்பின் ஸ்தாபகரும் இயக்குனருமான திருமதி. சசிகலா அவர்கள் தொடர்ந்து இவ்வாறான செயற்பாடுகள் இலங்கையில் முன்னெடுக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்வின் இலங்கை ஒருங்கிணைப்பாளரான உமா சந்திரபிரகாஷ் தலைமையில் இலங்கையைச் சேர்ந்த 100 பெண் சாதனையாளர்களுக்கு குறித்த விருதுகள் வழங்கப்பட்டன.

ஒவ்வொரு தனித்தனித் துறையிலும் தாங்கள் பெற்ற சாதனைகளை கௌரவிக்கும் வகையில் இந்நிகழ்வு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.