வீரகேசரியின் நத்தார் விழா

Published on 2021-12-21 18:13:47

வீரகேசரி மற்றும் தினக்குரல் குழும நிறுவனங்கள் இணைந்து ஏற்பாடு செய்த நத்தார் கரோல் நிகழ்வு நேற்று திங்கட்கிழமை வீரகேசரி தலைமையகத்தில் இடம்பெற்றது.

கிராண்ட்பாஸில் அமைந்துள்ள எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் நிறுவனத்தின் காரியாலயத்தில் மாலை 5 மணிக்கு நத்தார் தின விழா இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

நிறுவனங்களின் முகாமைத்துவப் பணிப்பாளர் குமார் நடேசன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கொட்டாஞ்சேனை புனித வியாகுல அன்னை ஆலயத்தின் பாடற்குழாம் நத்தார் கீதம் இசைத்தனர்.

அருட்தந்தை பேர்னாட் அடிகளார் நந்தார் செய்தியை வழங்கியிருந்ததுடன் நிறுவனங்களின் உயர் அதிகாரிகள், மற்றும் உத்தியோதர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.