யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் விஜயதசமி -  மானம்பூ உற்சவம்

Published on 2021-10-15 10:20:43இன்று காலை 6.45 மணிக்கு வசந்த மண்டப பூசையுடன் திருவிழா ஆரம்பமானது. சுகாதார நடைமுறைகளை பின்பற்றி நல்லூரின் பண்டைய காலத்தில் உபயோகிக்கப்பட்ட பழைமையான சிறிய குதிரை வாகனத்தில் முருகப்பெருமான் எழுந்தருளி அமைதியான முறையில் மானம்பூ உற்சவம் சிறப்பாக இடம்பெற்றது.