விசேட தேவையுடைய சிறுவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பம்

Published on 2021-09-24 15:47:07
விசேட தேவையுடைய மற்றும் நாட்பட்ட நோய்களினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் கொழும்பு லேடி றிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் பிரதமரின் பாரியார் ஷிராந்தி ராஜபக்ஷ தலைமையில் இன்று ஆரம்பிக்கப்பட்டது.

இதன்போது பெருமளவான பெற்றோர்கள் தமது பிள்ளைகளுடன் தடுப்பூசியை பெற்றுக்கொள்வதற்காக வருகை தந்திருந்தனர்.

இதேவேளை கொழும்பு, குருநாகல் மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களில் உள்ள விசேட தேவையுடைய சிறுவர்கள் மற்றும் நாட்பட்ட நோய்களினால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள்  ஆகியோருக்கு தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

இவ்வேலைத்திட்டம் எதிர்வரும் வாரம் முதல் நாடளாவிய ரீதியில் செயற்படுத்தப்படும்.