வீரகேசரியின் 91 அகவை நிறைவையொட்டி நிறுவனத்தில் விசேட நிகழ்வு

Published on 2021-08-06 17:39:25


இதழியல் வரலாற்றில் தனக்கென முத்திரைபதித்து தனக்கென தனியிடத்தை வைத்துள்ள வீரகேசரி இன்று 92 ஆவது அகவையில் காலடி எடுத்து வைக்கின்றது.

இதனையொட்டி கிரேண்ட்பாஸில் அமைந்துள்ள அலுவலகத்திலும், ஜா-எல ஹேக்கல பகுதியில் அமைந்துள்ள தலைமைக் காரியாலயத்திலும் விசேட நிகழ்வுகள் இடம்பெற்றன.

வீரகேசரியின் முகாமைத்துவ பணிப்பாளர் குமார் நடேசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிரேஸ்ட அதிகாரிகள் உட்பட ஊழியர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

கொரோனா சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றி நடந்த நிகழ்வில் சிரேஸ்ட அதிகாரிகள் பலரும் உரையாற்றியிருந்தனர்.

மேலும் இந்நிகழ்வின் சிறப்பசம்மாக பிஸ்.எல்கே இணையத்தளம் அங்குரார்பணம் செய்துவைக்கப்பட்டது.