கடற்படை முகாமிற்கு காணி சுவீகரிப்பு : போராட்டத்தில் குதித்த மக்கள்

Published on 2021-07-29 12:12:30


முல்லைத்தீவு மாவட்டத்தின் வட்டுவாகல் பகுதியில் அமைந்திருக்கின்ற கோட்டாபய கடற்படை முகாமிற்கான காணி அளவீட்டு பணிகள் இன்றைய தினம் இடம்பெறவிருந்த நிலையில் குறித்த காணி அளவீட்டு பணிகளுக்காக காலை 7 மணிக்கே நிலஅளவைத் திணைக்கள உயரதிகாரிகள் கடற்படை முகாமுக்குள் சென்றுள்ளனர்.


இதனைத் தொடர்ந்து அளவீடு செய்வதற்காக ஊழியர்களை ஏற்றிவந்த வாகனத்தை கடற்படை முகாமிற்கு செல்லவிடாது மறித்த பொது மக்களும் மக்கள் பிரதிநிதிகளும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.