லயன்ஸ் 306 பீ2 பிரிவினரால் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு

Published on 2021-04-08 09:12:52
கொழும்பு கொட்டாஞ்சேனை புனித லூசியாஸ் பேராலயத்தில் லயன்ஸ் 306 பீ2 பிரிவினரால் அண்மையில் , 200 குடும்பங்களுக்கான அத்தியாவசிய உணவுப் பொருட்களும் , கடற்படை , இராணுவம் மற்றும் பொலிஸ் வைத்தியசாலைகளுக்கு தலா 10 சத வீதம் சக்கரை நாற்காலிகளும் , வழங்கிவைக்கப்பட்டதுடன் , பேராலயத்தில் மரம் நாட்டு நிகழ்வும் இடம்பெற்றிருந்தது.

சர்வமத தலைவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் , லயன்ஸ் கழகத்தின் இரண்டாவது உதவி ஆளுனர் கிரேஷன் பெர்னாண்டோ , கொழும்பு மாநகரசபை உறுப்பினரும் , லயன்ஸ் கழக உறுப்பினருமான சிதம்பரம் மனோகரன் ,லயன்ஸ் கழகத்தின் உறுப்பினர்களான , நோபேட் பெர்னாண்டோ , ஜொனி பெர்னாண்டோ , பியசேன பெரேர மற்றும் கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசான் டி சில்வா , கடற்படை கெப்டன் விஜேயநாயக்க , தரைப்படை கெப்டன் சஜித் பிட்டியாவத்தகே உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

படப்பிடிப்பு : ஜே.சுஜீவகுமார்