வெள்ளி விழாவில் தினக்குரல் பத்திரிகை

2021-04-06 16:38:46

தினக்குரல் பத்திரிகை ஆரம்பிக்கப்பட்டு இன்று ஏப்ரல் மாதம் 6 ஆம் திகதியுடன் 24 ஆண்டுகள் நிறைவு பெற்ற நிலையில் தினக்குரல் பத்திரிகையின் 25 ஆவது ஆண்டு விழா நிகழ்வுகள் இன்று கொழும்பு கிராண்ட்பாஸில் அமைந்துள்ள தினக்குரல் தலைமையகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் தினக்குரல் பத்திரிகையின் முகாமைத்துவப்பணிப்பாளர் பி.கேசவராஜ், பிரதம செயற்பாட்டு அதிகாரி செந்தில்நாதன் ,பிரதம ஆசிரியர் கே.ஆர்.பி. ஹரன், செய்தி ஆசிரியர் சிவகணேசன்,வீரகேசரி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் கஜன் உட்பட தினக்குரல் பிரதி ஆசிரியர்கள், உதவி ஆசிரியர்கள் நிறுவனத்தின் ஊழியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

குத்துவிளக்கேற்றலை தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்வு ஆரம்பமானது. வரவேற்புரையை உதவி ஆசிரியர் எம்.எச்.எப் ஹுஸ்னா நிகழ்த்தினார்.
நிறுவனத்தின் கடன்கட்டுப்பாட்டாளரான திருமதி துஷ்யந்தினி விசாகரங்கன் நிகழ்வினை தொகுத்து வழங்கியதுடன் ஆசிரியபீட செயலாளரான செல்வி .பிரேமலதா செல்வநாதன் இந்நிகழ்வுக்கான ஒருங்கிணைப்பாளராக செயற்பட்டிருந்தார்.
நிகழ்வில் சிறப்புரை ஆற்றிய பிரதம ஆசிரியர் ஹரன் தினக்குரலின் 25 ஆண்டுகால பயணத்தை நினைவு கூர்ந்தார்.
பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியரான வீ.தனபாலசிங்கம் சுகவீனம் காரணமாக நிகழ்வுக்கு சமுகமளிக்க முடியாத நிலையில் காணொளி ஊடாக தனது ஆசிச்செய்தியை வழங்கியிருந்தார்.
வாரவெளியீட்டின் முன்னாள் ஆசிரியர் ஆர்.பாரதியின் வாழ்த்துச் செய்தியை ஊடகவியலாளர் ஜெயகாந்தன் வாசித்தார்.
அதனைத்தொடர்ந்து வணிகப்பிரிவு ஆசிரியர் திருமதி.மீரா.கணேஷமூர்த்தி மற்றும் இணையதள ஆசிரியர் ரஜீவன் ஆகியோர் தினக்குரல் பற்றி தமது எண்ணங்களை பகிர்ந்து கொண்டனர்.
உதயசூரியன் ஆசிரியர் திருமதி ஆர்.பாரதி நன்றியுரையை நிகழ்த்தினார். முகாமைத்துவப்பணிப்பாளர் கேசவராஜ் மற்றும் பிரதம செயற்பாட்டதிகாரி செந்தில்நாதன் ஆகியோர் கேக் வெட்ட நிகழ்வு இனிதே நிறைவுற்றது.
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right